Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Adhav Arjuna

“ரூ.6 லாட்டரி டிக்கெட்டில் தொடங்கி, ஒரே நாளில் 10 கம்பெனிகள் கைமாறிய கதை வரைக்கும்… தமிழ்நாட்டின் தற்போதைய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பின்னணியில் இருக்கும் அதிர வைக்கும் ஆவணப் பதிவுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சட்டமன்றத்தில் பேசப்பட்ட பேச்சுக்கும், தேர்தல் ஆணையத்தில் கொடுத்த வாக்குமூலத்திற்கும் உள்ள முரண்பாடுகள் என்ன? ED மற்றும் சிபிஐ வளையத்தில் இருக்கும் பின்னணிகளோடு இவருக்கு உள்ள தொடர்பு என்ன? ஆகாயம் என்பவர் தனது எக்ஸ்தளப்பதிவில் வெளியிட்டுள்ள பதிவுகள் தோலுரித்துக் காட்டுகின்றன.

அந்தப்பதிவில், ”ஒரு நாள். 16 மார்ச் 2015. அந்த ஒரே ஒரு நாள்ல, சாண்டியாகோ மார்ட்டினோட மகள் டெய்ஸி, பத்து நிறுவனங்களுக்கு ஒரே சமயத்துல டைரக்டர் ஆனாங்க. அதே 16 மார்ச் 2015-ல, அவங்க கணவர் ஆதவ் அர்ஜுனா Martin Fabrics and Traders Private Limited ன்னு ஒரு நிறுவனத்துக்கு டைரக்டர் ஆனார். அப்புறம் ஏழே நாள்ல. 23 மார்ச் 2015. அந்தப் பத்து நிறுவனத்துலயும் இருந்து சாண்டியாகோ மார்ட்டின், லீமா ரோஸ் மார்ட்டின், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் — மூணு பேரும் ஒரே நாள்ல ராஜினாமா பண்ணிட்டாங்க.

Martin Fabrics-ல இருந்தும் அதே மூணு பேரும் அதே நாள்ல வெளியேறினாங்க. ரெண்டு தடவை படிங்க. ஒரு நாள்ல பத்து கம்பெனி. ஏழு நாள் கழிச்சு பழைய உரிமையாளர்கள் வெளியேற்றம். இதுக்கு பேரு தொழில் முனைவு இல்ல. இதுக்கு பேரு கையளிப்பு. இதெல்லாம் நான் சொல்றது இல்ல. MCA-ல, மத்திய அரசோட நிறுவனப் பதிவேட்டுல, DIN 02761738 மற்றும் DIN 01815478 கீழ இன்னிக்கும் இருக்கிற ஆவணம். இப்ப அதே ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டோட பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்.

அவரோட வாழ்க்கை, ஆரம்பத்துல இருந்து… முதல்ல ஒரு எளிய கேள்வி. 2003-ல் இருந்து 2013 வரைக்கும் ஆதவ் அர்ஜுனா என்ன வேலை பாத்தார்? இது கிண்டல் கேள்வி இல்ல. நேர்மையான கேள்வி. 2003-ல் மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரில அரசியல் அறிவியல் B.A. முடிக்கிறார். இது அவரோட Form 26 affidavit-ல அவரே எழுதினது.

அப்புறம்? MCA பதிவேட்டுல அவரோட முதல் டைரக்ய்டர் ஷிப் 6 நவம்பர் 2013. இடையில பத்து வருஷம். ஒரு நிறுவனம் இல்ல. ஒரு பங்குதாரர் பதிவு இல்ல. ஒரு documented வேலை இல்ல. பத்து வருஷம் அவர் என்ன பண்ணார்னு எந்த ஆவணமும் இல்ல.

இப்ப 2013-14-ஐ பாருங்க. 6 நவம்பர் 2013 — Arise Constructions Pvt Ltd. 7 ஜனவரி 2014 — Arise Industries Pvt Ltd. இதே நாள்ல டெய்ஸியும் சேர்ந்து நியமனம். 20 ஜனவரி 2014 — Daisy Designs Pvt Ltd. கம்பெனி பேரே அவரோட மனைவி பேரு. பத்து வருஷம் ஒண்ணுமே இல்ல. அப்புறம் ரெண்டே மாசத்துல மூணு கம்பெனி. என்ன நடந்துச்சு அந்த ரெண்டு மாசத்துல?

இப்ப அந்தப் பத்து நிறுவனத்தையும் பெயர் சொல்லிப் பாருங்க. ஒவ்வொண்ணும் எப்ப பதிவானது ன்னும் பாருங்க. Martin Property Developers — பதிவு 9 ஏப்ரல் 2007 Martin Township Developers — 19 ஏப்ரல் 2007 Martin Elite Promoters — 25 ஏப்ரல் 2007 Martin Dwellers — 26 ஏப்ரல் 2007 Martin Hi-Tech Construction — 17 மே 2007 Martin Real Estate — 4 ஜூன் 2007 Martin Realcon — 22 ஏப்ரல் 2009 Charles Promoters — 2 ஆகஸ்ட் 2010 Martin Fabrics and Traders — 4 ஜூன் 2010

பேரைக் கவனிச்சீங்களா? எல்லாத்துலயும் ஒரே வார்த்தை. மார்ட்டின். இந்த நிறுவனங்கள் எல்லாம் 2007-2010-ல் பதிவானவை. அப்ப ஆதவ் அர்ஜுனாவுக்கு எந்த டைரக்டர் ஷிப்பும் இல்லை. எந்த டாக்குமெண்டெடு தொழிலும் இல்லை. நிறுவனங்களை நிறுவியது யார்? பதிவேடு சொல்லுது — Martin Santiago (DIN 00029458), Martin Leemarose (DIN 00029522), Jose Charles Martin (DIN 01733013). அப்பா. அம்மா. மகன்.

அப்புறம் 16 மார்ச் 2015 வருது. மகள் ஒரே நாள்ல எல்லாத்துக்கும் டைரக்டர். அப்புறம் 23 மார்ச் 2015 வருது. அப்பா, அம்மா, மகன் — எல்லாத்துல இருந்தும் வெளியேற்றம். Charles Promoters-ல் மூணு பேரும் ஒரே நாள்ல, 23 மார்ச் 2015-ல, ராஜினாமா. Martin Property Developers-ல சாண்டியாகோவும் லீமா ரோஸும் 23 மார்ச் 2015-ல ராஜினாமா. Martin Realcon-ல அதே நாள். Martin Elite Promoters-ல அதே நாள். ஒரே வாரம். ஒரே குடும்பம். ஒன்பது கம்பெனி. ஒரு கையளிப்பு. யாரும் ஒரே நாள்ல பத்து தொழில் தொடங்க முடியாது. ஆனால் மாமனார்கிட்ட இருந்துஒரே நாளில் பத்து தொழிலை வாங்கிக்க முடியும்.

இப்ப ஒரு முகவரி. 54, மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என். மில்ஸ் அஞ்சல், கோயம்புத்தூர் – 641029. இந்த முகவரியை மனசுல வச்சுக்கோங்க. டெய்ஸி ஆதவ் அர்ஜுனா டைரக்டரா இருக்கிற நிறுவனங்களில் ஒன்பது இதே முகவரில பதிவாகியிருக்கு.

Martin Property Developers. Martin Elite Promoters. Martin Hi-Tech Construction. Martin Realcon. Charles Promoters. Dominant Housing Developers. Dominant Skyscrapers. Dominant Towers. ஆதவ் அர்ஜுனா 16 மார்ச் 2015 முதல் 11 பிப்ரவரி 2021 வரை director-ஆ இருந்த Martin Fabrics and Traders — அதுவும் இதே முகவரி. இன்னும் ஒண்ணு இருக்கு அதே முகவரில. FUTURE GAMING AND HOTEL SERVICES PRIVATE LIMITED.CIN: U51901TZ1991PTC003583. பதிவு 30 டிசம்பர் 1991. நிறுவன director: Martin Santiago. இதுதான் அந்த லாட்டரி நிறுவனம். இதுதான் ED-யோட முதன்மை PMLA இலக்கு. ஒரே கதவு.

அமைச்சரோட மனைவியோட ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யமும், ED விசாரிக்கிற லாட்டரி நிறுவனமும், ஒரே கட்டிடத்துல இருந்து பதிவு தாக்கல் பண்ணுது. கரண்ட் பில் ஒரே முகவரிக்கு வந்தா அது ஒரே வீடு. இதுல ரெண்டு பேர் ன்னு எப்படி சொல்ல முடியும்?

இதையும் படியுங்க  "சதி வலையில் சிக்காதே விஜய்!" - காங்கிரஸ் விரித்த வலையில் விழுகிறாரா முதல்வர்? ஸ்டாலின் எழுப்பிய சுளீர் கேள்விகள்!

இப்ப அவரோட “சொந்த” முதலீட்டு நிறுவனம். ARISE INVESTMENTS AND CAPITAL PRIVATE LIMITED. இதுதான் அவரோட முதன்மை நிதி நிறுவனம். செலுத்தப்பட்ட மூலதனம் ₹31.75 கோடி. மார்ட்டின் குடும்பத்தோட ₹1 லட்சம் shell கம்பெனிகளை விட 3,000 மடங்கு பெரிசு.

CIN: U67120TZ1994PTC005250. அந்த CIN-ஐ கவனமா படிங்க. நடுவுல ஒரு எண் இருக்கு. 1994. இந்த நிறுவனம் பதிவானது 5 ஆகஸ்ட் 1994. அப்ப ஆதவ் அர்ஜுனாவுக்கு வயசு 12. பள்ளிக்கூடம் போற வயசுல ஒரு நிதி நிறுவனம் தொடங்கியிருக்க முடியாது. தொடங்கவும் இல்ல. அந்த நிறுவனத்தோட பழைய பெயர் “INTEGRAL INVESTMENTS LIMITED”. அது வேற ஒருத்தரோட நிறுவனம். அதை வாங்கி, பேரை மாத்தி, எடுத்துக்கிட்டாங்க. அவர் அதுல டைரக்டர் ஆனது 15 ஜூன் 2016.

இன்னொரு விஷயம். அந்த நிறுவனத்தோட பதிவு அலுவலகம் எங்க இருக்கு தெரியுமா? “Daisy Plaza”, 355-359, 6-வது தெரு, காந்திபுரம், கோயம்புத்தூர் – 641012. Daisy Plaza. அவரோட மனைவி பேர்ல இருக்கிற கட்டிடம். சுயமா உழைச்சு உருவானவரோட முகவரி, அவரோட மனைவி பேர்ல இருக்கிற கட்டிடம். அவரோட affidavit-ல அவரே அறிவிச்ச தொழில் என்னன்னு தெரியுமா? “Business.” Political consultant இல்ல. Strategist இல்ல. Business. இப்ப முதல் பொய். இது சட்டமன்றத்துல, பதிவேட்டுல இருக்கு. 7 ஆகஸ்ட் 2026. தமிழ்நாடு சட்டப்பேரவை. நிதிநிலை அறிக்கை விவாதம். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினோட மோதல்.

ஆதவ் அர்ஜுனா சொன்ன வாக்கியம்: “நான் எந்த தொழிலும் இல்லை. எந்த நிறுவனமும் நடத்தவில்லை.” சரி. இப்ப அவரே கையெழுத்து போட்டு சத்தியம் பண்ணி தேர்தல் ஆணையத்துல கொடுத்த Form 26 affidavit-ஐ எடுங்க. அதே வருஷம், நாலே மாசம் முன்னாடி, மார்ச் 2026-ல தாக்கல் பண்ணினது. தொழில் (Profession) — “Business.” வருமான ஆதாரம் (Source of income) — “Business.”

அதோட நிக்கல. அதே affidavit-ல அவர் அறிவிச்ச நிறுவனப் பங்குகள்: Arise Investments and Capital Ltd — ₹27,92,53,678Arise Investments & Consultants Pvt Ltd — ₹2,09,90,000 Voice of Commons Strategic Consulting Pvt Ltd — ₹9,99,000 Athletic Game Strategy and Research Pvt Ltd — ₹99,990 Arise Constructions Pvt Ltd — ₹90,000 Voice of Commons Entertainment Pvt Ltd — ₹90,000 Voice of Commons Foundation — ₹1,00,000

ஏழு நிறுவனம். சுமார் ₹30 கோடி பங்கு. இப்ப ரெண்டையும் அடுத்தடுத்து வையுங்க. மார்ச் 2026, சத்தியப் பிரமாணத்துல: “தொழில்.”ஆகஸ்ட் 2026, சட்டமன்றத்துல: “எந்த தொழிலும் இல்லை.” நாலு மாச இடைவெளி. ஒரே மனுஷன். ரெண்டு வேற வேற வாக்குமூலம். ஒண்ணு தேர்தல் ஆணையத்துக்கு. ஒண்ணு தமிழ்நாட்டு மக்களுக்கு. எது பொய்? இது ஒரு தடவை நடந்த தவறு இல்ல. இது ஒரு பழக்கம். வரிசையா பாருங்க.

பொய் 2 — மாரத்தான்.
26 ஜூன் 2026. சென்னை மெரினா. “Start Run, Stop Drugs” விழிப்புணர்வு ஓட்டம். இதை நடத்தினது அவரோட சொந்த அமைச்சகத்தோட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். அவர் சொன்னது: “இதுவரை இந்தியாவில் எந்த முதலமைச்சரும் மாரத்தானில் 3 கிலோமீட்டர் ஓடியதில்லை; தமிழ்நாட்டில் தான் முதல்முறையாக ஜோசப் விஜய் பங்கேற்றுள்ளார்.”

இப்ப ஆவணம். 20 அக்டோபர் 2024. ஸ்ரீநகர். காஷ்மீர் அரை மாரத்தான். ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பதவியில இருந்துக்கிட்டே, 21 கிலோமீட்டர் முழுசா ஓடி முடிச்சார். நேரம் சுமார் 1 மணி 50 நிமிடம். வயசு 54. அவரோட சொந்த வார்த்தை: “So damn pleased with myself, completed Kashmir Half Marathon – 21 KM” அந்த ஓட்டமும் போதைப்பொருள் எதிர்ப்புக்காகவே நடந்தது. 3 கிலோமீட்டர் இல்ல. 21 கிலோமீட்டர். விஜய் ஓடுறதுக்கு 20 மாசம் முன்னாடி.

பொய் 3 — விசிக
தவெக கூட்டத்தில் திருமாவளவனைப் பத்தி சொன்னார்: “உங்கள் கட்சி ஏற்கனவே எங்கள் பக்கம் மாறிவிட்டது. இப்போது நீங்களும், சுமார் 20 கட்சிப் பொறுப்பாளர்களும் மட்டுமே எஞ்சியுள்ளீர்கள்”

25 ஜனவரி 2026-ல திருப்பிச் சொன்னார்: நான் சொல்ல வந்தது விசிக-வுக்குள் உள்ள 20 பேர் திமுகவுக்கு சாதகமா இருக்காங்க ன்னு, “விசிகவில் 20 பேர்தான் இருக்காங்க” ன்னு இல்ல. அவரோட சொந்த வாக்கியத்துல “remain” ன்னு இருக்கு. மிச்சம் இருக்கிறவங்க ன்னு அர்த்தம். அதை வேற எப்படி படிக்க முடியும்?

பொய் 4 — ரஜினிகாந்த்.
12 மார்ச் 2026-ல ரஜினி அரசியலுக்கு வராம போனதுக்கு திமுக அழுத்தம்தான் காரணம் ன்னு சொன்னார். 17 மார்ச் 2026-ல ரஜினிகாந்தே பதில் சொன்னார் — அது “உண்மைக்கு மாறானாது” ன்னு. அப்புறம் ஆதவ் அர்ஜுனா வருத்தம் தெரிவிச்சார்.
நாலு தடவை. நாலு வேற வேற தலைப்பு. ஒரே pattern. அப்புறம் “நான் அப்படி சொல்லலை” ன்னு சொல்லு. இப்ப அந்தப் பணம் எங்க இருந்து வருது ன்னு பாருங்க. இது கதை இல்ல, இது கணக்கு.

Comptroller and Auditor General of India. Report No. 1 of 2017. சிக்கிம் மாநில லாட்டரி மேல செயல்திறன் தணிக்கை.
இது எதிர்க்கட்சி வெளியிட்ட அறிக்கை இல்ல. இது இந்தியாவோட தலைமைக் கணக்கு தணிக்கையாளர் வெளியிட்டது.

“Against the total sale proceeds of ₹44,834.87 crore during 2010-16, the MAs deposited ₹628.74 crore” தமிழ்ல: 2010-16-ல மொத்த டிக்கெட் விற்பனை ₹44,834 கோடி. அதுல மாநில அரசுக்கு போய் சேர்ந்தது ₹628 கோடி. 1.40%. நூறு ரூபாய் மக்கள் கொடுத்தா, அரசுக்கு ஒரு ரூபாய் நாற்பது காசு. மீதி 98 ரூபாய் 60 காசு?

அதே அறிக்கை, அதே பத்தி:

“The net revenue (MGR) realised by the State … constituted a mere 0.40 per cent of the sale proceeds” நிகர வருவாய் 0.40%. மிசோரம்ல? CAG கணக்குப்படி ₹11,834 கோடி விற்பனைக்கு மாநிலத்துக்கு ₹25 கோடி. 0.22%. இப்ப அந்த machine எப்படி வேலை செய்யுது ன்னு ED-யோட சொந்த வார்த்தைல படிங்க. 18 நவம்பர் 2024: “90 per cent of the business of the company is in lottery tickets of Rs 6 face value, against which most of the prizes were below Rs 10,000, which is non-taxable” “No proper record was maintained by the company regarding prize winners and, sold and unsold tickets”
புரியுதா?

இதையும் படியுங்க  “ஸ்டாலினுக்கு பிற கட்சிகளை கேள்வி கேட்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது?” – ஆதவ் அர்ஜுனா விமர்சனம்

₹6 டிக்கெட். ₹10,000-க்கு கீழ பரிசு. வரி இல்ல. கணக்கு இல்ல. CAG அதே ₹10,000 எல்லையைத்தான் பத்தி 2.7-ல பதிவு பண்ணுது — அதுக்கு கீழ இருக்கிற பரிசுகளை விநியோகஸ்தரே கொடுத்துக்குவார், அரசு கஜானாவைத் தொடவே தொடாது. அரசு பாக்காத இடைவெளி எதுவோ, சரியா அங்கதான் லாபம் இருக்கு.

CAG பத்தி 2.4 இன்னும் மோசம்:”The Department had adopted a system of sale on ‘all sold’ basis where all tickets handed over to the MA were considered as ‘sold'”

விற்கப்படாத டிக்கெட்டையும் “விற்றது” ன்னு எழுதிக்கிட்டாங்க. ED-யோட 2 ஏப்ரல் 2022 attachment உத்தரவு அதுக்கு அடுத்த படியைச் சொல்லுது: “illegally retained unsold lottery tickets and claimed top prizes on such unsold tickets” விற்காத டிக்கெட்டை வச்சுக்கிட்டு, அதுக்கே முதல் பரிசு அறிவிச்சுக்கிட்டாங்க ன்னு குற்றச்சாட்டு. 2014-17-ல சுமார் ₹400 கோடி.
இது 2001-லயே தொடங்குது. அப்பவே வருமான வரித்துறை இதே pattern-ஐ கண்டுபிடிச்சு CBI-க்கும் CVC-க்கும் அறிக்கை அனுப்புச்சு.இப்ப ஒரு கேள்வி. ₹6 டிக்கெட்டை யாரு வாங்குறாங்க?

பங்குச்சந்தை முதலீட்டாளர் இல்ல. மென்பொருள் பொறியாளர் இல்ல. கூலி வேலை பாக்குறவங்க. சிலிகுரியில இருந்து வந்த சுதாம் பர்மன், ஓட்டுநர். ஒரு நாளைக்கு அஞ்சு டிக்கெட். நாளொன்றுக்கு ₹200-250. ஒரு வீடு கட்டணும் ன்னு ஆசை. அசாமில இருந்து வந்த ஹுசைன், புலம்பெயர் தொழிலாளி. தினமும் ரெண்டு டிக்கெட்.

ஆந்திராவுல இருந்து வந்த ஆனந்த், கட்டிடத் தொழிலாளி. நாலு டிக்கெட். “What will I do with the money? Go home.” கேரளாவுல மட்டும் தினமும் 1.8 கோடி டிக்கெட் அச்சடிக்கப்படுது. மூணுல ஒரு மலையாளி தினமும் வாங்குறார்.
பொருளாதார நிபுணர் டாக்டர் ஜோஸ் செபாஸ்டியன் சொல்லுது: “The poor among Hindus are increasingly becoming addicted to the lottery.”

இப்ப தமிழ்நாடு. 1990-கள்ல இங்க என்ன நடந்துச்சு தெரியுமா? செப்டம்பர் 2002. சென்னை காவல் ஆணையர் விஜயகுமார்-க்கு ஒரு கடிதம் வருது. எழுதினது ஒரு சாதாரண பெண். லாட்டரியால தன் குடும்பம் நாசமான கதை. இப்படியே போனா தானும் தன் குழந்தைகளும் உயிரோட இருக்க முடியாது ன்னு எழுதியிருந்தாங்க.

அப்ப மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையரா இருந்த கண்ணப்பன் அந்தத் தொழிலைப் பத்தி என்ன சொன்னார் தெரியுமா:
“Nearly no one won anything substantial and almost all buyers lost a great portion of their precious earnings.”
தமிழ்ல: கிட்டத்தட்ட யாருக்கும் பெரிசா எதுவும் கிடைக்கல. கிட்டத்தட்ட எல்லாருமே தங்க கஷ்டப்பட்ட சம்பாத்தியத்துல பெரும் பகுதியை இழந்தாங்க.

2003-ல தமிழ்நாடு லாட்டரியைத் தடை பண்ணுச்சு. ஜெயலலிதா அரசு. அதுக்கு அப்புறம் இன்னிக்கு வரைக்கும், 23 வருஷமா, எந்த அரசும் அதைத் திரும்பக் கொண்டு வரல.

உச்ச நீதிமன்றம் 2015-ல என்ன சொல்லுச்சு தெரியுமா: “தொன்றுதொட்டு அனைத்து நாகரிக சமூகங்களாலும் சூதாட்டம் ஒரு கேடு விளைவிக்கும் தீய பழக்கமாகக் கருதப்படுகிறது.

“அது முழு சமூகத்தையும் பீடிக்கிறது; அது ஒவ்வொரு வீட்டிலும் நுழைகிறது; அது எல்லாத் தரப்பினரையும் சென்றடைகிறது; அது ஏழைகளின் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தைச் சுரண்டுகிறது. கடைசி வரியை மறுபடி படிங்க. “அது ஏழைகளின் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தைச் சுரண்டுகிறது..” அந்த வேட்டையிலதான் இன்னிக்கு தமிழ்நாட்டு அமைச்சரவைல ஒரு நாற்காலி இருக்கு.

இப்ப வழக்குகள். ஒவ்வொண்ணும் ஆவணம்.

சிக்கிம். சிபிஐ கொச்சி, 2014-ல FIR மற்றும் குற்றப்பத்திரிகை. குற்றச்சாட்டு: 1 ஏப்ரல் 2009 முதல் 31 ஆகஸ்ட் 2010 வரை பரிசுச் சீட்டு கணக்கை ஊதிப் பெருக்கி சிக்கிம் அரசுக்கு ₹910,29,87,566 நஷ்டம். MJ Associates-ஓட பங்குதாரர்கள் மார்ட்டின் மற்றும் ஜெயமுருகன் பேர்ல.

ED attachment வரிசை: 22 ஜூலை 2019 — ₹119.6 கோடி. கோவைல 88 மனை, 61 flat. 23 டிசம்பர் 2021 — ₹19.59 கோடி. 2 ஏப்ரல் 2022 — ₹409.92 கோடி. 2 ஜூலை 2022 — ₹173.48 கோடி. மே 2023 — ₹456.84 கோடி.

ED-யோட டிசம்பர் 2021 வாக்குமூலம்:
லாட்டரித் தொழில் மூலம் ஈட்டப்பட்ட குற்றவியல் வருவாயின் ஒரு பகுதியை, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற கூட்டாளிகளின் பெயரில் உருவாக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாயிலாக அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்தனர். 40-க்கும் மேற்பட்ட நிறுவனம். குடும்ப உறுப்பினர்கள் பேர்ல.

ED பிப்ரவரி 2025-ல சொன்ன எண் இன்னும் பெரிசு: 350-க்கும் மேற்பட்ட நிறுவனம் — 15 partnership, 200 company, 110 LLP. சொத்து புத்தக மதிப்பு ₹3,000 கோடிக்கு மேல.

இப்ப அமைச்சரோட மாமியார். லீமா ரோஸ் மார்ட்டின், அதிமுக எம்.எல்.ஏ, லால்குடி.அவங்களே தேர்தல் ஆணையத்துல கொடுத்த அஃபிடவிட்டில் அறிவிச்ச நிலுவை வழக்குகள் நாலு.
பிரிவுகள்: IPC 420 — ஏமாற்றுதல். IPC 467 — மதிப்புமிக்க ஆவணத்தை போலியா தயாரிப்பது. IPC 468 — ஏமாற்றுவதற்காக போலி ஆவணம். IPC 471 — போலி ஆவணத்தை உண்மையானது போல பயன்படுத்துவது. IPC 294A — அரசு அனுமதி இல்லாத லாட்டரி அலுவலகம் நடத்துவது. IPC 120B — குற்றச் சதி. மேற்கொண்டு PMLA மற்றும் FEMA.

இதையும் படியுங்க  43%: மோடி ஆட்சியில் அதிகரித்த ஊழல்.. வேலைவாய்ப்பின்மையே மிகப்பெரிய தோல்வி..! அதிரவைக்கும் சி-வோட்டர்..!

அதே அஃபிடவிட்டில்-ல அறிவிச்ச குடும்பச் சொத்து ₹5,863 கோடி — 2026 தமிழ்நாடு தேர்தல்லயே அதிகபட்சம். அறிவிச்ச படிப்பு: 6-ஆம் வகுப்பு.

சென்னை CCB வழக்கு. 12 மார்ச் 2012-ல ஒருத்தரோட வீட்டுல இருந்து ₹7.20 கோடி ரொக்கம் பறிமுதல். குற்றச்சாட்டு: தமிழ்நாட்டுல தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை. வழக்கு சாண்டியாகோ மார்ட்டின், லீமா ரோஸ் உள்பட அஞ்சு பேர் மேல. காவல்துறை closure report கொடுத்தது — ஆனா 28 அக்டோபர் 2024-ல சென்னை ஹைகோர்ட் அமர்வு (நீதிபதிகள் S.M. சுப்பிரமணியம், V. சிவகங்கை) அதை ரத்து பண்ணி வழக்கை மறுபடி உயிர்ப்பிச்சது.

இப்ப நிலவரம்: 7 நவம்பர் 2023 — PMLA Adjudicating Authority ₹456.84 கோடி attachment-ஐ உறுதி பண்ணுது.30 மே 2025 — PMLA Appellate Tribunal அதை மறுபடியும் உறுதி பண்ணுது.9 ஜூன் 2026 — சென்னை ஹைகோர்ட். தலைமை நீதிபதி S.A. தர்மாதிகாரி, நீதிபதி G. அருள்முருகன் அமர்வு. 39 appeal. ED-க்கு notice, ஆறு வாரம்.

அந்த 39 appeal-ல மனுதாரர்கள் யாரு? சாண்டியாகோ மார்ட்டின். லீமா ரோஸ் மார்ட்டின். டெய்ஸி ஆதவ் அர்ஜுனா. மாமனார். மாமியார். மனைவி. இப்ப சட்டமன்றம். இது 2026 ஜூன் முதல் ஆகஸ்ட் வரைக்குமான பதிவு.

22 ஜூன் 2026. சட்டம் ஒழுங்கு விவாதம். ஆதவ் அர்ஜுனா திமுக மீது ஒரு கடுமையான குற்றச்சாட்டை ஆதாரம் இல்லாம சொல்றார். பேரவைத் தலைவர் ஜெ.சி.டி.பிரபாகர் — அவரோட சொந்தக் கட்சிக்காரர் — நடுவுலயே நிறுத்துறார்:

“ஆதாரம் இல்லாம இப்படி குற்றம் சாட்ட முடியாது. பேரு சொல்லு. இடம் சொல்லு. வழக்கு விவரம் சொல்லு. காவல் நிலையம் சொல்லு. மறுநாள் ஆதாரம் கொடுக்குறேன் ன்னு உறுதி கொடுத்தார். கொடுத்தார்னு எந்தச் செய்தியும் இல்ல.

17 ஆகஸ்ட் 2026. கோவை மாணவர் அமுதன் கொலை மேலான விவாதம். பேரவைத் தலைவர் ஆதவ் அர்ஜுனாவோட பேச்சில் பேரவை மாண்புக்கு எதிரானதுன்னு ஒரு பகுதியை நீக்குறார் அன்னிக்கு பேச்சு நீக்கப்பட்ட மூணு அமைச்சர்ல இவரும் ஒருத்தர். திமுக வெளிநடப்பு.

27 ஆகஸ்ட் 2026. சாதிவாரி கணக்கெடுப்பு விவாதம். “நான் பழைய கதையை சொல்ல ஆரம்பித்தால் உங்களுக்கு நல்லதல்ல” ன்னு எதிர்க்கட்சியை மிரட்டுறார். மறுபடியும் பேச்சின் ஒரு பகுதி நீக்கம்.

அதே 27 ஆகஸ்ட், செயலாளர்கள் சபைல இல்ல ன்னு உதயநிதி புகார் சொன்னப்ப, “பக்கத்துல வார் ரூமில் இருக்காங்க” ன்னு பதில் சொன்னார். பேரவைத் தலைவர் அதை ஏத்துக்கல. துரைமுருகனோட முன்னுதாரணத்தைச் சொல்லி, “ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டுமானாலும்” செயலாளர்கள் இருக்கணும் ன்னு உத்தரவு போட்டார்.

11 மற்றும் 21 ஆகஸ்ட். எடப்பாடியோட “குதிரை பேரம்” வார்த்தையை நீக்கச் சொல்லி கேட்குறார். வேற ஒரு அமைச்சரோட பிரதமர் பத்தின பேச்சையும் நீக்கச் சொல்லி கேட்குறார். அடுத்தவங்க வார்த்தையை நீக்கச் சொல்லிக் கேட்குறவரோட சொந்தப் பேச்சு ரெண்டு தடவை நீக்கப்பட்டிருக்கு. 25-26 ஆகஸ்ட் 2026. பரந்தூர். அவரோட வார்த்தை:

தமிழ்ல வேற ஒரு வரி: “பினாமி நிறுவனங்களை உருவாக்கி கனிமங்களைச் கொள்ளையடிப்பவர்களை மக்கள் தேர்தல் அரசியலில் தூக்கி எறிவார்கள்”

ஒரு பேரு இல்ல. ஒரு நிறுவனம் இல்ல. ஒரு ஆவணம் இல்ல. திமுகவின் எ.வ.வேலு நேரடியா கேட்டார் — “யார் வைத்திருந்தார்கள் என்று சொல்ல வேண்டுமா?” பதில் வரல.

“பினாமி நிறுவனம்” ன்னு சொல்லுறவரோட மனைவி, ஒரே நாள்ல பத்து நிறுவனத்துக்கு இயக்குனர் ஆனவங்க, ஒன்பது கம்பெனி ஒரே முகவரி, அந்த முகவரில ED விசாரிக்கிற லாட்டரி நிறுவனம். கண்ணாடி வீட்ல இருந்துக்கிட்டு கல் எறியுறதுன்னு ஒரு பழமொழி இருக்கு. இது அதுவும் இல்ல. இது கல்லை வச்சுக்கிட்டு கண்ணாடி வீட்டைக் காட்டுறது.

Republic Tamil

மூணு உண்மையை அடுக்கி வைக்கிறேன். மூணுமே ஆவணம். ஒண்ணு. 2003-ல தமிழ்நாடு லாட்டரியைத் தடை பண்ணுச்சு. காரணம், ஒரு காவல் அதிகாரியோட வார்த்தைல, “கிட்டத்தட்ட யாருக்கும் பெரிசா எதுவும் கிடைக்கல, கிட்டத்தட்ட எல்லாருமே தங்கள் சம்பாத்தியத்தை இழந்தாங்க.” அந்தத் தடை 23 வருஷமா இருக்கு.

ரெண்டு. அதே 23 வருஷத்துல, அந்தத் தடை போடப்பட்ட மாநிலத்துலயே, லாட்டரிக் குடும்பம் மூணு சட்டமன்றத்துல மூணு இடம் பிடிச்சிருக்கு. மனைவி லீமா ரோஸ் — அதிமுக, லால்குடி. மகன் ஜோஸ் சார்லஸ் — புதுச்சேரி, மருமகன் ஆதவ் அர்ஜுனா — தவெக, வில்லிவாக்கம், அமைச்சர்.

மூணு கட்சி. ஒரே ED ஃபைல். அந்த அமைச்சர்கிட்ட இப்ப பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் இருக்கு. டெண்டர் கொடுக்கிற துறை. நிலம் எடுக்கிற துறை. ஒப்பந்தம் போடுற துறை. அவரோட மனைவி, அதே நேரத்துல, அதே மாநிலத்தோட ஹைகோர்ட்ல, ₹456.84 கோடி ED அட்டாச்மெண்டை எதிர்த்து 39 அப்பீலில் ஒருத்தரா நிக்குறாங்க.

16 மார்ச் 2015. ஒரு நாள். பத்து கம்பெனி. 23 மார்ச் 2015. ஏழு நாள் கழிச்சு. அப்பா, அம்மா, மகன் வெளியேற்றம். அந்த ஏழு நாள்லதான் இந்தக் கதை முழுசும் இருக்கு. ஒரு ₹6 டிக்கெட்டை வாங்குற கூலித் தொழிலாளி ஒருத்தர் இருக்கார். அவர் ஒரு நாளைக்கு ₹200 போடுறார். வீடு கட்டணும் ன்னு. அவர் கொடுத்த நூறு ரூபாய்ல, மாநில அரசுக்கு போனது ஒரு ரூபாய் நாற்பது காசு. மீதி எங்க போச்சு?

54, மேட்டுப்பாளையம் ரோடு, கோயம்புத்தூர் – 641029. அதே கதவு. இன்னிக்கு தமிழ்நாட்டு அமைச்சரவைக்குள்ள வந்திருக்கு. கோர்ட் நபரைப் பார்க்காது. ஆவணத்தைப் பார்க்கும். ஆவணம் இங்க இருக்கு. ஏழையோட உழைப்பை இது வேட்டையாடுது. அந்த வேட்டையிலதான் இன்னிக்கு தமிழ்நாட்டு அமைச்சரவைல ஒரு நாற்காலி இருக்கு. இப்ப வழக்குகள். ஒவ்வொண்ணும் ஆவணம்” எனக் கூறி இருக்கிறார்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago