தமிழக முதலமைச்சர் விஜய் சமீபத்தில் டெல்லியிள் இருந்து திரும்பும் வழியில் கர்நாடக மாநிலத்திற்கு ஒரு முக்கியப் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, அவர் கர்நாடகாவின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
வெள்ளி வாள் காணிக்கை
கொல்லூர் மூகாம்பிகை கோவில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆஸ்தான கோவிலாகத் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் இந்த கோவிலின் தீவிர பக்தர்களாக இருந்தனர். அன்று எம்.ஜி.ஆர் இந்த கோவிலுக்கு ஒரு ‘தங்க வாள்’ காணிக்கையாக வழங்கியிருந்தார்.
அதே வழியைப் பின்பற்றும் விதமாக, தற்போதைய முதலமைச்சர் விஜய், மூகாம்பிகை அம்மனுக்கு 1.6 கிலோ எடை கொண்ட ஒரு பிரம்மாண்டமான ‘வெள்ளி வாள்’ ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்தி வழிபாடு நடத்தினார். இது அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் கொல்லூர்
கொல்லூர் மூகாம்பிகை கோவில் அமைந்துள்ள பகுதி, சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ள மிக அழகிய மற்றும் ரம்மியமான இடமாகும். முதலமைச்சர் விஜய் அங்கு சென்றிருந்த சமயத்தில், நல்ல மழைப்பொழிவும் இருந்ததால், அந்த இடமே மிகவும் இதமான, கண்கொள்ளாக் காட்சியாகக் காட்சியளித்தது.
ரசிகர்களின் உற்சாக வரவேற்பு
சுவாமி தரிசனம் முடிந்த பிறகு, முதலமைச்சர் விஜய் தனது காரை தானே ஓட்டிச் சென்றார். அவர் காரை ஓட்டி வருவதைக் கண்டதும், அங்கு திரண்டிருந்த ஏராளமான தமிழ், கர்நாடக ரசிகர்கள் “விஜய் சார்.. விஜய் அண்ணன்..” என்று உற்சாகக் குரல் எழுப்பி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ரசிகர்களின் ஆரவாரத்தைக் கேட்ட முதலமைச்சர் விஜய், காரின் கண்ணாடியை இறக்கி, அவர்களுக்கு கைகளை அசைத்து, தனது புன்னகையோடு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய்யின் இந்த கர்நாடகப் பயணம், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக மட்டுமன்றி, எல்லையைக் கடந்து அவருக்கும் இருக்கும் மக்கள் செல்வாக்கையும், அவரது எளிமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் அமைந்திருந்தது.
