Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கத்தாரைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதாக இஸ்ரேகிய செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐக்கிய அரபு அமீரகம் தெஹ்ரானுக்கு 3 பில்லியன் டாலர் அனுப்பியுள்ளது. இதற்குப் பதிலாக, போரின் போது ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்காது. ஆனாலும், ஈரான் இந்த ஒப்பந்தத்தை மறுத்துள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ”இந்த ஒப்பந்தத்தின் கீழ் தெஹ்ரான் எந்த நிதியையும் பெறவில்லை.’ என தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் விமானம் மூலம் தெஹ்ரானுக்கு அனுப்பப்பட்டன. இந்த சரக்கில் உள்ள பணம், பொருட்களின் அளவு வெளியிடப்படவில்லை. இராஜதந்திர முயற்சிகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி அனுப்பப்பட்டதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் இது குறித்து, ”ஈரான்-அமெரிக்கப் போரின் போது அதன் மீது 2,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. போரின் போது ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மீது 2,265 ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது. இதேபோல், 551 பாலிஸ்டிக் ஏவுகணைகளும் ஏவப்பட்டன. அபுதாபி, துபாய் மீது 29 குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையும் படியுங்க  முனீரின் வேலைக்காரனாக மாறிய பாகிஸ்தான் மத்திய அமைச்சர்..! சந்தி சிரிக்கும் ஜனநாயகம்..!

இந்த ஈரானியத் தாக்குதல்களில் 13 ஐக்கிய அரபு அமீரகவாசிகள் கொல்லப்பட்டனர். 230 பேர் காயமடைந்தனர். ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலுடன் கூட்டணி வைத்திருப்பதால், அதன் மீது அதிக தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியது.

ஆனாலும், போரின் இரண்டாம் அலையில் ஈரான் ஐக்கிய அரபு அமீரகம் மீது எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை. தற்போது, ​​ஈரான் குவைத், பஹ்ரைன் – ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களை மட்டுமே குறிவைக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முன்பு, ஈரான் கத்தாருடனும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது.

அமெரிக்காவுடனான போரின் தொடக்கத்தில், ஈரான் கத்தாருடனும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, கத்தார் தளங்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ஈரான் உறுதியளித்தது. அதற்குப் பதிலாக, 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஈரானின் சொத்துக்களை முடக்கத்திலிருந்து விடுவிக்க கத்தார் ஒப்புக்கொண்டது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் கத்தார் ஒரு முக்கியப் பங்காற்றி வருகிறது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே ஈரான் 12 பில்லியன் டாலரைப் பெறுவதை உறுதிசெய்யவும் கத்தார் செயல்பட்டு வருகிறது, இதன்மூலம் ஈரான் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடங்க முடியும். அதுமட்டுமின்றி, கத்தார் ஈரானுக்காகத் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வருகிறது.

இதையும் படியுங்க  ஈரானின் 120 பில்லியன் டாலரை முடக்கி டிரம்ப்..! எந்தெந்த நாடுகளில் சிக்கியுள்ளது..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago