Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

”தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்கம் மம்தா பானர்ஜி, கேரளா பினராய் விஜயன் உள்ளிட்டோர் வீழ்த்தப்பட்டதற்கு எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையே காரணம்” என்று ரவிக்குமார் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரியில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரவிக்குமார் எம்.பி., சிறப்புரை ஆற்றினார்.

Chief Election Commissioner

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு பிறகு நடத்தப்பட்ட தேர்தலில் மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாஜகவிற்கு எதிரான கட்சிகள் வீழ்த்தப்பட்டதற்கு எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையே காரணம்” என்று குற்றம் சாட்டினார்.

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் உடன்பாடு இல்லை என்று தவெக அரசு கூறவில்லை. தேர்தல் ஆணையரை மட்டும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினால் அது திசை திருப்பும் முயற்சி என்றுதான் குறிப்பிட்டு உள்ளதாக விளக்கம் அளித்தார்.

இதையும் படியுங்க  “திமுகவில் திடீர் இணைவு! ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக EX MLA இணைந்தார்”
Republic Tamil

தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டுமென கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். இந்தியா கூட்டணி கட்சி கூட்டம் நாளை நடைபெறுகிறது. தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் குறித்து விவாதம் செய்து முடிவு செய்யப்படும் என்றார். அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் திமுக இல்லாவிட்டாலும் எஸ்.ஐ.ஆர் விவகாரத்திற்கு எதிரான முடிவையே அவர்கள் எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழக அரசு மைனாரிட்டி அரசாக உள்ளது. மெஜாரிட்டி அரசாக இருந்த மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட மாநில அரசுகளை பிஜேபி-யினர் என்ன பாடுபடுத்தினார்கள் என்பது தெரியும். நிதி வழங்காமலும் ஆளுநர் மூலம் அரசாங்கத்திற்கு சிக்கலை கொடுத்து நெருக்கடியை உருவாக்கினார்கள்.

இது போன்ற சூழ்நிலையில் தவெக மைனாரிட்டி அரசாக இருப்பதால் நீக்கு போக்குடன் தான் நடந்து கொள்ள முடியும். காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று ஆளும் அரசு கோரிக்கை வைக்கிறது. ஆனால் பிஜேபியின் தேர்தல் துறை வழக்குகளை காரணம் காட்டி மறுக்கிறது என்றும், தவெக அரசு மெஜாரிட்டி அரசாக மாறிவிடக்கூடாது அப்படி மாறினால் எதிர்ப்பு வலுவாக இருக்கும் என்று பாஜக நம்புவதாக ரவிக்குமார் குற்றம் சாட்டினார்.

இதையும் படியுங்க  “டெண்டரா? இல்லை முன்கூட்டியே முடிவா?… சமூக வலைதளங்களில் வெடிக்கும் கேள்விகள்!”

தலைமை செயலகம் கட்டும் விவகாரத்தையும் பரிசீலிப்பதிதாக அரசு அறிவித்து இருக்கிறது. ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது அதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களிடமிருந்து எதிர்ப்புகள் வரும் பொழுது அதனை திரும்ப பெறுவதில் அவர்கள் தயங்கியது இல்லை. தலைமை செயலகம் கட்டும் முடிவில் மக்களுக்கு விரோதமான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாது என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மதுராந்தகத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் விசிக பங்கேற்க உள்ளது. தலைவர்கள் மேடையில் பேசும்போது கைத்தட்டுகிறார்கள் என்பதற்கெல்லாம் பேசக்கூடாது. நாகரீகமாக பேச வேண்டும்” என வலியுறுத்தினார்.

-பி.சக்திவேல், புதுச்சேரி செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago