Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vijay Amit shah

“நாங்கள் போட்ட திட்டத்தால்தான் விஜய்யால் ஒரு பைசா கூட செலவழிக்காமல் வெற்றி பெற முடிந்தது!” எனப் புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம் கூறியுள்ள கருத்து தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம், “காங்கிரஸ் தங்களின் தோல்வியை மறைப்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன், இரண்டு தேர்தல் ஆணையர்கள் முரண்பட்டுள்ளதாக ஒரு மாயயை உருவாக்கி கொண்டிருக்கிறது.

இறந்தவர்கள், முறைகேடாக வந்து குடியேறியவர்களின் வாக்குகளையும் பெற்றுத்தான் இதுவரை காங்கிரஸ் வெற்றி பெற்று வந்தது. அதை ஒழிப்பதற்காகத்தான் எஸ்ஐஆர் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்ட உடனே தமிழகத்தில் எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்தது என்று தெரியும். எந்தவித பணமும் கொடுக்காமல் விஜய் வெற்றி பெற்றார். கேரளாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதுபற்றி நாங்கள் எந்த குறையும் சொல்லவில்லையே. மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்று தான் குறிப்பிட்டோம்.

இதையும் படியுங்க  "ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்சுக்கு யோசிச்சீங்களேடா..!" வதந்தி பரப்புவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? - அமைச்சர் பர்வேஸ் நெத்தியடி!
Vijay

ஆனால், காங்கிரஸ் வெற்றி பெற்றால் நேர்மையாக நடப்பது போலவும், நாங்கள் வெற்றி பெற்றால் எஸ்ஐஆரை பயன்படுத்தி வெற்றி பெறுவது போலவும் காங்கிரஸ் ஒரு மாயயை செய்து கொண்டிருக்கிறது. தொடர் தோல்விகளால் துவண்டுள்ள ராகுல் காந்தி, அவர்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால் இந்திய மக்கள் அவரை ஒருபோதும் வெற்றியடைய வைக்க மாட்டார்கள்.

வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவை பற்றியும், ஆபரேஷன் சிந்துரை பற்றியும் ராகுல் காந்தி குறை சொல்கிறார். இதனால்தான் அவர் சரியான தலைவர் இல்லை என்று இந்திய இளைஞர்கள் ஒதுக்குகிறார்கள். சோனியா தலைமையில் இருக்கும்போது கூட சில இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் ராகுல் காந்தி வந்த பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர்.

ஸ்திரத்தன்மை கொண்ட ஒரு தலைவர் இருப்பதால் பாஜக மீது நல்ல பெயரும், ராகுல் காந்தி பிதற்றுவதால் காங்கிரஸ் மீது மிகப் பெரிய அதிருப்தியும் மக்களிடம் உள்ளது.பிரதமர் மோடி மீது 65 கோடி இளைஞர்களின் பார்வை இருக்கிறது. அதனடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடக்கும்போது வெற்றி பெறுகிறோம்.

இதையும் படியுங்க  கள்ளச்சாரம் விவகாரத்தில் திமுகவின் உண்மை முகம் அம்பலம்.. தவெக அரசு ஒருத்தரையும் விடக்கூடாது.. அன்புமணி!

விஜய் ஒரு பைசா கூட கொடுக்காமல் வெற்றி பெற்றார் என்றால், அது பொய்யான வாக்காளர்கள் யாரும் வாக்கு செலுத்த முடியவில்லை என்பதால்தான். விஜய் மாற்றாந்தோட்டத்து மல்லிகையாக இருந்தாலும் மணக்கட்டும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.

விஜய் வெற்றி பெற்றது எஸ்ஐஆர் என்ற எங்களின் சீர்த்திருத்த முறை, பாஜகவின் செயல்பாடுகள், தவறான வாக்காளர்கள் வாக்களிக்காததுதான் காரணம். எனவேதான் எஸ்ஐஆர் குறித்து மக்களிடம் கொண்டு செல்ல பாஜக முயற்சிக்கிறது” என்று வி.பி.ராமலிங்கம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago