இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி , பட்டியபி.ஆர். கவாய்ல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு ஆதரவாக உள்ள வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தை (எஸ்.சி-எஸ்.டி சட்டம்) ஆதரித்துப் பேசியுள்ளார். தவறான பயன்பாடு நிகழ்ந்தாலும், அது மிகவும் அரிதானது என்பதால், இந்த அடிப்படையில் சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று அவர் கூறியுள்ளார். ஐ.ஐ.டி மும்பை மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, இந்தச் சட்டம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
எஸ்.சி-எஸ்.டி சட்டத்தின் தவறான பயன்பாடு குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். என்.டி.டி.வி-க்கு அளித்த பேட்டியில், தவறான புகார்களைப் பதிவு செய்ய சட்டத்தைப் பயன்படுத்துபவர்களைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்றம் சட்டத்தைத் திருத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.
சட்டத்தை ரத்து செய்ய வேண்டாம்
“ஒரு சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக மட்டும் அதை ரத்து செய்ய முடியாது. மக்கள் அதைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான வழிகளைக் கண்டறிவதே சிறந்தது. சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக நாடாளுமன்றம் திருத்தங்கள் மூலம் கடுமையான தண்டனைகளை வழங்கினால், அது ஒரு சிறந்த அணுகுமுறையாக இருக்கும்” என முன்னாள் தலைமை நீதிபதி கவாய் கருத்து தெரிவித்துள்ளார்.
நீதிபதி பி.ஆர். கவாய் (ஓய்வு), முன்னாள் தலைமை நீதிபதி
ஐஐடி பம்பாய் தற்கொலை வழக்கு
ஐஐடி பம்பாய் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், ஐஐடி பம்பாய் பேராசிரியரான சூர்யநாராயண் துலா மீது பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் சட்டத்தின் பிரிவுகள் பயன்படுத்தப்பட்டு வரும் வேளையில், நீதிபதி கவாய் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். இருப்பினும், நீதிபதி கவாய் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
”என் பார்வையில், இதுபோன்ற எந்தவொரு கருத்தும் இந்த வழக்கின் ஊடக விசாரணைக்கு வழிவகுக்கும், மேலும் நான் எப்போதும் ஊடக விசாரணைகளை எதிர்த்து வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வகுப்புகளுக்குச் செல்லப் பயமாக இருப்பதாகக் கூறும் பேராசிரியர்களுக்கு என்ன நடக்கும் என்று கேட்கப்பட்டபோது. இதற்கு அவர், “ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் உள்ள அனைத்துப் பேராசிரியர்களும் அந்தக் கல்லூரிகளுக்குச் செல்ல அஞ்சும் அளவிற்கு இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று நான் நினைக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற தவறான பயன்பாட்டு நிகழ்வுகள் பொதுவானவை அல்ல. மிக அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நாம் இதைக் கண்டிருக்கிறோம்,” என்றார்.
தலைவர்கள் சமூக நல்லிணக்கத்தைப் பேண வேண்டும். இது ஒரு வர்க்கத்திற்கும் மற்றொரு வர்க்கத்திற்கும் இடையே மோதலுக்கு வழிவகுக்க அனுமதிக்கப்படக்கூடாது. ஏனெனில் நாட்டின் ஒற்றுமையே முதன்மையானது. வரதட்சணைச் சட்டங்களும், குடும்ப வன்முறைச் சட்டங்களும் கூட தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், ஒரு குறிப்பிட்ட சட்டத்தின் விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்காக மட்டுமே, அந்தச் சட்டம் பலவீனமானது என்று முடிவுக்கு வர முடியாது என்பது என் கருத்து.
இந்தச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டவுடன் கைது செய்வது கட்டாயமா என்றால் இல்லவே இல்லை. இந்த விதிகள் துன்புறுத்தலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்று அவர்கள் உணர்ந்தால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தை அணுகலாம். பாதுகாப்பு வழங்குவதில் நீதிமன்றம் கையறு நிலையில் இல்லை” என்று கூறினார்.
