https://republictn.com/

சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் மீது முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

குழல் சிறையில் இருந்து விடுதலையான பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் திமுக போன்ற அளவுக்கு ஊடகங்களை கொடூரமாக கையாண்ட கட்சி வேறு எதுவும் இல்லை என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “கடந்த மூன்று ஆண்டுகளாக சவுக்கு மீடியா ஊழியர்கள் ஒவ்வொருவரும் சந்தித்த துன்பங்கள் என்ன? என் தாயார் ஏன் இப்படி அகால மரணம் அடைய வேண்டும்? என்பதையெல்லாம் தவெக தலைவர் விஜயும், முதலமைச்சரும் பார்த்துக் கொண்டுதான் இருந்திருப்பார்கள் என்று கூறினார்.

அத்துடன், அருண் ஐபிஎஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை முதலமைச்சர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

யாரை வேண்டுமானாலும் சந்திக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். முதல்வர் விஜய் அழைப்பு கொடுத்தால் அவரை சந்திக்கவும் தயாராக இருக்கிறேன் என்று சவுக்கு சங்கர் பதிலளித்தார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago