Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சாரு பாண்டே, மத்திய அரசின் 19 போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஒரு அரசு வேலை பெறுவதற்கே பலர் கடுமையாகப் போராடும் சூழலில், தொடர்ந்து 19 தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ள அவரது சாதனை சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தின் டில்டா பகுதியைச் சேர்ந்த சாரு பாண்டே, ஹேம்சந்த் யாதவ் பல்கலைக்கழகத்தில் கணிதப் பிரிவில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றுள்ளார்.

குறிப்பிடத்தக்க வகையில், எந்தவொரு தனியார் பயிற்சி மையத்திலும் சேராமல், இணையவழி கல்வி வளங்கள், வீடியோக்கள் மற்றும் ஆன்லைன் மாதிரித் தேர்வுகள் மூலமாக சுயமாகத் தயாராகி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

எஸ்.எஸ்.சி. சி.ஜி.எல். (SSC CGL), சி.எச்.எஸ்.எல். (CHSL), எம்.டி.எஸ். (MTS), ரயில்வே தேர்வு வாரியத் தேர்வுகள் (RRB), எஸ்.பி.ஐ. (SBI), ஐ.பி.பி.எஸ். (IBPS) உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு வேலைவாய்ப்புத் தேர்வுகளில் அவர் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.

இதையும் படியுங்க  மோடியை பாம்பாட்டியாக வரைந்த கார்ட்டூன் - உலகளவில் பெரும் சர்ச்சை

சாரு பாண்டேவின் இலக்கு ஒரு நிலையான அரசு அதிகாரியாகப் பணியாற்றுவதே என கூறப்படுகிறது. அதற்காக பல்வேறு தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றாலும், தனக்குப் பிடித்தமான மற்றும் தனது திறமைக்கு ஏற்ற குறிப்பிட்ட பணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கில், கிடைத்த 18 வேலைவாய்ப்புகளை அவர் ஏற்காமல் நிராகரித்துள்ளார்.

அவரது இந்த விடாமுயற்சி மற்றும் சாதனையைப் பாராட்டும் வகையில், சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் ‘அட்-ஹோம்’ (At-Home) நிகழ்ச்சியில் அவருக்கு சிறப்பு கவுரவம் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், அவரது சாதனையை பலர் பாராட்டி வரும் நிலையில், ஒரே நபர் பல தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைகளை ஏற்காமல் விட்டதால், மற்ற தகுதியான வேலைதேடுபவர்களின் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

எனினும், கடின உழைப்பு, சுய முயற்சி மற்றும் தெளிவான இலக்குடன் செயல்பட்டால் உயர்ந்த சாதனைகளை எட்ட முடியும் என்பதற்கு சாரு பாண்டே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறார்.

இதையும் படியுங்க  "அமைச்சரின் சொந்த தொகுதியிலேயே மெகா கூத்து! நைட்டு டியூட்டிக்கு வராமல் 'பல்' டாக்டரை அனுப்பிய அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!"
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago