Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகளான டிஃபானி ட்ரம்ப், அவரது கணவர் மைக்கேல் பௌலஸ் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தனிப்பட்ட ஆன்மீக மற்றும் சுற்றுலாப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

டெல்லிக்கு வருகை தந்த டிஃபானி ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர், அங்குள்ள புகழ்பெற்ற சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

கோவிலின் கட்டிடக்கலையை கண்டு வியந்த அவர், இது ஒரு “அற்புதமான அனுபவம்” என தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் தனது பயணத்தை முடித்த பின்னர், சனிக்கிழமை (மே 30) அவர் தனி விமானம் மூலம் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு புறப்படுகிறார். அங்கு ஞாயிற்றுக்கிழமை காலை உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை பார்வையிட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் அதன் அழகை ரசிக்க திட்டமிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஆக்ராவிலிருந்து மீண்டும் தனி விமானம் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தின் சுற்றுலா நகரமான ஜெய்சால்மருக்கு அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெய்சால்மர் கோட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களை பார்வையிடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க  டிரம்பின் மாஸ்டர் பிளான்: சரிகிறது பெட்ரோல் விலை..? அமேய்க்க வசமான வரலாற்றின் மாபெரும் ஒப்பந்தம்..!

இது முற்றிலும் தனிப்பட்ட குடும்பப் பயணமாக இருந்தாலும், அமெரிக்க அதிபரின் குடும்ப உறுப்பினர் என்பதால் டிஃபானி ட்ரம்ப் செல்லும் டெல்லி, ஆக்ரா, ஜெய்சால்மர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ளூர் நிர்வாகம் மற்றும் பாதுகாப்புப் படையினர் மூலம் கடுமையான பா

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago