Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சீனாவின் செங்டு (Chengdu) நகரைச் சேர்ந்த 52 வயதான செல்வந்த பெண் ஒருவர், சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள சொகுசு பென்ட்லி (Bentley) காரில் வந்து ஹோட்டலில் பாத்திரம் கழுவும் பணியில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமும் கருப்பு நிற பென்ட்லி காரில் பணியிடத்துக்கு வரும் அவர், சாதாரண ஏப்ரன் மற்றும் ரப்பர் பூட்ஸ் அணிந்து தனது பணியை மேற்கொள்கிறார். அவருக்கு பணத் தேவையோ, வாழ்வாதார சிக்கலோ எதுவும் இல்லை.

செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த அவர், வீட்டில் சும்மா இருப்பதை விரும்பாததால், நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கவும், உடல் உழைப்பின் மூலம் புத்துணர்ச்சி பெறவும் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்ததாக கூறியுள்ளார்.

தனியாக கார் ஓட்டிச் செல்லாமல், அவரது மகள்தான் தினமும் அவரை காரில் அழைத்து வந்து பணியிடத்தில் இறக்கிவிட்டு செல்கிறார். ஆரம்பத்தில் இந்த வேலையைச் செய்யக் கூடாது என்று மகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பின்னர் தாயின் விருப்பத்தை மதித்து தற்போது அவரே தினமும் அழைத்து வந்து விடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்க  பற்றி எரியும் சீன கப்பல்..! ஈரான்- அமெரிக்காவிற்கு இடையே பதற்றம்..!

இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், “வீட்டில் சும்மா இருப்பது எனக்கு பிடிக்காது. பாத்திரம் கழுவுவது எனக்கு மிகவும் விருப்பமான வேலை. ஒரு நாள் கூட இந்த வேலையைச் செய்யாமல் இருந்தால் ஏதோ குறைவாக இருப்பது போல் உணர்கிறேன். இந்த உடல் உழைப்பு எனக்கு மனநிறைவும் புத்துணர்ச்சியும் அளிக்கிறது” என்றார்.

சீனாவின் சமூக ஊடக தளமான வெய்போ (Weibo)-வில் இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள நிலையில், “இவருக்கு பணப் பற்றாக்குறை இல்லை; நேரப் பற்றாக்குறைதான் உள்ளது” என்றும், அவரது எளிமை, உழைப்பின் மீதான ஆர்வம் மற்றும் பணிவான மனப்பான்மையைப் பாராட்டியும் பலர் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

செல்வந்தராக இருந்தபோதிலும், தனக்குப் பிடித்த வேலையை மகிழ்ச்சியுடனும் எளிமையுடனும் செய்து வரும் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முறை, சீனாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago