Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Nagpur’s Weapon

இடம்;- நாக்பூர் ரேஷிம்பாக் மைதானம். தேதி: அக்டோபர் 20, 2026.

விஜயதசமி நாள். RSS-ன் 101-வது தொடக்க நாள் விழா. மேடையில் மோகன் பகவத். முன்னால் நீளமான மேஜை. நீலத் துணி விரிக்கப்பட்டு, அதன் மீது வரிசை கட்டி அடுக்கப்பட்டிருக்கின்றன பட்டாக்கத்திகள், வீச்சரிவாள்கள், ஈட்டிகள், கதாயுதங்கள், கேடயங்கள். பூக்களால் அலங்கரித்து, அதற்குப் பெயர் ‘சஸ்திர பூஜை’!  

புகைப்படத்தில் வெள்ளைச் சட்டை, காக்கி பேண்ட், கருப்புத் தொப்பியுடன் தலைவர்கள் ஆயுதங்களைத் தொட்டுப் பார்த்து ‘பூஜை’ செய்கிறார்கள். இந்தப் புகைப்படத்தைத்தான் தனது முகநூலில் பகிர்ந்து சுருக் எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்.  

அவர் கேட்பது இதுதான்:

“பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் காவல்துறை, நாக்பூரில் பட்டாக்கத்தி, வீச்சருவாள், துப்பாக்கி என வன்முறை ஆயுதங்களை பகிரங்கமாக வைத்து நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை? பிறந்தநாளுக்கு ஒரு நீதி, RSS நிகழ்ச்சிக்கு இன்னொரு நீதியா?”

இதையும் படியுங்க  ஸ்டாலினின் அதே கருணாநிதித்தனம்..! ஆளூர் ஷாநவாஸின் அதிரடி ஆபரேஷன்..! 'லீக்'கை வீக் ஆக்கும் துபாய் சீக்ரெட்..!

### இரட்டை நீதியின் உச்சம்!

தமிழ்நாட்டில் சமீப காலமாக டிரெண்டிங்… 

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டினால், ரீல்ஸ் போட்டால், உடனே IPC, ஆயுதச் சட்டம் பாய்கிறது. இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, “பொது அமைதிக்கு அச்சுறுத்தல்” என மீடியா முன் நிறுத்தப்படுகிறார்கள்.

ஆனால், நாக்பூரில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில், பட்டப்பகலில் ஆயுதங்களை அடுக்கி வைத்து விழா நடத்தினால்… அது ‘பாரம்பரியம்’, ‘கலாச்சாரம்’, ‘சஸ்திர பூஜை’! காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறது. கேமராக்கள் வாழ்த்துகின்றன.

சட்டம் எல்லோருக்கும் சமம் என்றால், இந்த முரண்பாட்டிற்கு என்ன பதில்?

பதிவு செய்யப்படாத அமைப்புக்கு ஆயுத அனுமதியா?

மனோ தங்கராஜ் வைக்கும் அடுத்த குண்டு இன்னும் வீரியமானது. “இந்தியச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பு, வன்முறைக்கான ஆயுதங்களை வைத்திருப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதா?” என கேட்டிருக்கிறார் 

ஆம்! RSS இன்றுவரை அரசிடம் பதிவு செய்யப்பட்ட அமைப்பு இல்லை என்பது அதன் தலைவர்களே ஒப்புக்கொண்ட விஷயம். அப்படிப்பட்ட ஒரு அமைப்பு, ஆண்டுதோறும் ஆயுதங்களைக் காட்சிப்படுத்துவதும், பயிற்சி முகாம்களில் லத்தி, கத்தி பயிற்சி அளிப்பதும் எந்தச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுகிறது?

இதையும் படியுங்க  ரங்கசாமிக்கு டெல்லி செக்..! புதுச்சேரியைக் கைப்பற்ற பாஜகவின் பக்கா வியூகம்..! கவிழும் என்ஆர் காங்கிரஸ் ஆட்சி..?

சாமானியன் கையில் இரும்புக் கம்பி இருந்தாலே ‘ஆயுதம் வைத்திருந்தார்’ என வழக்கு. ஆனால், இங்கே மேடை போட்டு ஆயுதக் கண்காட்சியே நடக்கிறது. இதுதான் ‘சட்டத்தின் ஆட்சியா’?

ISIS-க்கும் RSS-க்கும் என்ன வித்தியாசம்? மனோ தங்கராஜின் மிகக் கூர்மையான கேள்வி இதுதான். இதைக் கேட்டதும் சங் பரிவார் தரப்பு கொதிக்கிறது. ஆனால், கேள்வியின் நியாயத்தை அலச வேண்டாமா?

ஒரு பக்கம், மதத்தின் பெயரால் ஆயுதங்களைத் தூக்கி, பயிற்சி அளித்து, ‘புனிதப் போர்’ என முழங்கும் அமைப்புகளை உலகம் பயங்கரவாத அமைப்புகள் என்கிறது. இன்னொரு பக்கம், ‘தேசபக்தி’, ‘பண்பாடு’ என்ற போர்வையில் அதே ஆயுத வழிபாடு, அதே சீருடை அணிவகுப்பு, அதே வெறுப்புப் பேச்சு.

வித்தியாசம் என்ன? ஒன்று தடை செய்யப்பட்டிருக்கிறது. இன்னொன்று ஆட்சியாளர்களின் ஆசியுடன் வலம் வருகிறது. அவ்வளவுதானா?

விஜயதசமி அன்று நாக்பூரில் நடந்த ‘சஸ்திர பூஜை’யில் பாரம்பரிய ஆயுதங்களுடன் நவீன ஆயுதங்களின் மாதிரிகளும், ட்ரோன்களும் காட்சிப்படுத்தப்பட்டதாகச் செய்திகள் சொல்கின்றன. இது வெறும் பூஜையா? இல்லை, பலத்தைக் காட்டும் அரசியல் சமிக்ஞையா?  

இதையும் படியுங்க  அடுத்த முதல்வர் ஆதவ் அர்ஜூனா..! விஜய் பதவியில் இறங்கணும்… இல்ல ஏறணும்..! போயஸ் கார்டனில் பக்கா ஸ்கெட்ச்..!

வரலாறு சொல்கிறது… 

காந்தி படுகொலை முதல் மலேகான் குண்டுவெடிப்பு வரை ஆயுதங்களுடன் தொடர்புபடுத்தப்பட்ட சம்பவங்களில் சங் பரிவாரத்தின் பெயர் அடிபடும்போதெல்லாம், ‘தனிநபர் செயல்’ என ஒதுங்கிக்கொள்வதும், அதே நேரத்தில் ஆயுதப் பயிற்சியை ‘தற்காப்பு’ என நியாயப்படுத்துவதும் தொடர்கதை.

மனோ தங்கராஜின் கேள்வி, வெறும் அரசியல் விமர்சனம் அல்ல. இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரின் மனதிலும் எழும் கேள்வி: சட்டம் சாமானியனுக்கு மட்டும்தானா? சங்கத்திற்கு விலக்கா?

பதில் சொல்ல வேண்டியது நாக்பூர் காவல்துறை அல்ல… டெல்லியில் அமர்ந்திருக்கும் அதிகார பீடம்!

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago