https://republictn.com/

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘அறம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்பது குறித்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது அதன் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். ராஜேஷ் முக்கிய அப்டேட்டைப் பகிர்ந்துள்ளார்.

அவரது தகவலின்படி, முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் நயன்தாரா தான் முதன்மை கதாபாத்திரத்தில், குறிப்பாக கலெக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

முதல்பாகத்தை இயக்கிய இயக்குநர் கோபி நைனாருடன் இணைந்து ‘அறம் 2’ உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ‘அறம்’ திரைப்படம் முடிந்த பிறகு, இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்க இருந்த நிலையில், இயக்குநர் கோபி நைனார் ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து மற்றொரு படத்தை இயக்கச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவின் கால்ஷீட் வீணாகக் கூடாது என்பதற்காகவே, ‘அறம் 2’-க்கு பதிலாக நயன்தாராவை வைத்து ‘ஐரா’ (Airaa) திரைப்படம் தயாரிக்கப்பட்டதாகவும் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். ராஜேஷ் கூறியுள்ளார்.

அதன் பின்னர், இயக்குநர் கோபி நைனார் சில புதிய கதைகளில் பிஸியாக இருந்ததால் ‘அறம் 2’ திட்டம் தாமதமடைந்தது.

எனினும், படம் ரத்து செய்யப்படவில்லை என்றும், ‘அறம் 2’ உருவாக்கும் திட்டம் இன்னும் செயல்பாட்டிலேயே (On the cards) உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கதையை இயக்க இயக்குநர் கோபி நைனாருக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்றும் கே.ஜே.ஆர். ராஜேஷ் கூறியுள்ளார்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகும் ‘அறம் 2’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாததால், இந்த அறிவிப்பு நயன்தாரா ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago