மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக தீவிரமடைந்து டீப் டிப்ரஷன் எனப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது வலுபெற்றிருக்கிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் சில நேரங்களில் 70 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம்
எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் கொந்தளிப்பு ஏற்படுட்டு கப்பல்களுக்கும், மீனவர்களுக்கும் ஒரு ஆபத்தானநிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

அதை கருதில் கொண்டு மீனவர்கள் கடலுக்கு செல்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஒன்பது துறைமுகங்களுக்கு ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. இந்த ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கையை பொறுத்தவரை தூரக்கடலில் புயல் உருவாகக்கூடிய ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படும் என்பதை உணர்த்தக்கூடிய வகையில்
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.
இந்த ஒன்றாம் எண்ணனை பொறுத்தவரையில் தூரக்கடலில் ஒரு புயல் உருவாகுவதற்கான ஒரு சாத்திய கூறு இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் ஏற்றப்படும். ஒன்றாம் கூண்டு எச்சரிக்கை ஒன்பது துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருக்கிறது. அதன்படி சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டிருக்கிறது.
அதேபோன்று இந்த வானிலை மாற்றத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மேலும் வலுபெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரைகளுக்கு இடையே அதாவது விசாகப்பட்டினம் அருகே இது அடுத்த சில மணி நேரங்களில் கரகையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலும் மேலும் வழுபெறக்கூடிய நிலையில் ஆந்திரா, ஒடிசா நோக்கி நகந்தாலும் இதன் சுழற்சி மற்றும் வளிமண்டல மேலெடுக்கு மாற்றம் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் அதாவது சென்னை, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் இதியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு கருதி மீனவர்கள் யாரும் அடுத்த சில நாட்களுக்கு ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வாநிலை ஆய்வுமையும் அறிவுறுத்தி இருக்கிறது.
