vijay Banner

போன மாசம் ஈ.வெ.ரா. நூலகத்தை திறந்து வைக்க முதல்வர் விஜய் கோவைக்கு வந்தப்போ, அவரை எப்படியாவது ‘இம்ப்ரெஸ்’ பண்ணி, தங்களோட விசுவாசத்தைக் காட்டணும்னு மாநகராட்சி அதிகாரிகள் ஒரு மாஸ்டர் பிளான் போட்டாங்க.

சென்னையில இருக்கிற மாதிரியே, கோவையிலும் பயணியர் நிழற்குடைகள்ல முதல்வர் விஜயோட படத்தைப் போட்டு… ‘சிங்கப்பெண் திட்டம்’, ‘காலை உணவுத் திட்டம்’னு அரசு திட்டங்களைப் பட்டியலிட்டு பிரம்மாண்ட விளம்பரங்களை ரெடி பண்ணி ஒட்டுனாங்க.

ஆனா, இங்கதான் அதிகாரிகளோட தந்திர புத்தி வெளிப்பட்டுச்சு. முதல்வர் விஜய் பயணம் செய்யப்போற அவிநாசி ரோடு, காந்திபுரம் ஏரியாக்கள்ல இருக்கிற பஸ் ஸ்டாப்புகள்ல மட்டும்தான் இந்த விளம்பரங்களை வச்சாங்க. மத்த ஏரியாக்களை வழக்கம் போல அம்போன்னு விட்டுட்டாங்க. அதாவது, முதல்வர் கண்ணுல படுற இடங்கள்ல மட்டும் ‘பளபள’னு காட்டிட்டு, மத்த இடங்களை அப்படியே மூடி மறைச்சிருக்காங்க.

விஷயம் என்னன்னா, முதல்வர் விஜய் கோவையை விட்டு கிளம்புன அடுத்த சில நாட்களிலேயே, அந்த விளம்பரங்கள் எல்லாம் அப்படியே கிழிச்சு எறியப்பட்டு, பழையபடி காசு வர்ற தனியார் விளம்பரங்களை அங்கே சொருகிட்டாங்க. முதல்வர் வர்றப்போ மட்டும் விசுவாசம் காட்டிட்டு, போன உடனே அவரோட படத்தைக் கிழிச்சதை பார்த்து த.வெ.க. நிர்வாகிகள் செம கடுப்பாகிட்டாங்க.

இதையும் படியுங்க  2029 டார்கெட்… விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’… டெல்லி வரை பாயும் வியூகம்.. ஆடிப்போய் கிடக்கும் அதிமுக- திமுக..!

இதப்பத்தி மாநகராட்சியோட முக்கிய அதிகாரி ரவிதேஜாவிடம் த.வெ.க. நிர்வாகிகள் நேர்ல போய் நியாயம் கேட்க… அங்கேதான் அந்த அதிகாரி ஒரு ‘ஆஸ்கார்’ லெவல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்காரு. “அய்யய்யோ… சி.எம்., விளம்பரங்களை ‘ரிமூவ்’ பண்ணிட்டாங்களா?! யார் எடுத்தாங்கன்னே தெரியலையே… நான் வேணா மறுபடியும் வைக்கச் சொல்றேன்” அப்படின்னு, எதுவுமே தெரியாத ஒரு பச்சை குழந்தை போல கண்ணை உருட்டி, அகல விரிச்சுக்கிட்டு அவர் சொன்னதை கேட்டு த.வெ.க. நிர்வாகிகள் அப்படியே அதிர்ச்சியில உறைஞ்சு போயிட்டாங்க.

விளம்பரத்தை எடுத்தது யாருன்னு தெரியாமலா மாநகராட்சி நிர்வாகம் இயங்குது? முதல்வர் வர்றப்போ ஒரு நியாயம், அவர் போனதும் ஒரு நியாயமா? அதிகாரிகளின் இந்த ‘பல்டி’ அடிக்கும் புத்தியும், ‘ஒண்ணும் தெரியாத பாப்பா’ நடிப்பும் கோவை த.வெ.க.வினரிடையே அனலைக் கூட்டியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *