Trump

அமெரிக்கா உலக அரங்கில் அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதாகத் தாரக மந்திரம் முழங்கினாலும், அதன் நடவடிக்கைகளும் கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களும் முற்றிலும் முரணானது. அந்த வகையில், பாகிஸ்தானின் எஃப்-16 (F-16) போர் விமானங்களை நவீனமயமாக்குவதற்காக அமெரிக்கா அறிவித்துள்ள 686 மில்லியன் டாலர் மதிப்பிலான மாபெரும் திட்டம் இந்தியப் பாதுகாப்புத்துறையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்களை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 686 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை வழங்கவுள்ளது. இந்த பாதுகாப்புத் திட்டத்தை அமெரிக்காவின் “இரட்டை நிலைப்பாடு” என்று இந்தியா எச்சரித்துள்ளது. ஒருபுறம், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை அமெரிக்கா தடுக்கிறது. மறுபுறம், பாகிஸ்தானின் அணுசக்தி திறனை மேம்படுத்துகிறது என்று இந்தியா கூறுகிறது.

அமெரிக்கா வழங்கும் 686 மில்லியன் டாலர் திட்டத்தில் அணு ஆயுதங்கள் இல்லை என்றாலும், இது பாகிஸ்தான் தனது எஃப்-16 போர் விமானங்களில் மேம்பட்ட முன்னேற்றங்களைச் செய்து, அதன் அணு ஆயுதத் தாக்குதல் திறன்களை அதிகரிக்க உதவும். இந்தத் திட்டம் எஃப்-16 போர் விமானங்களின் வழிசெலுத்தல், தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தி, இந்தியாவிற்கு எதிரான அதன் அணு ஆயுதத் தாக்குதல் திறனை அதிகரிக்கும்.

இதையும் படியுங்க  இன்ஸ்டா, பேஸ்புக்கிற்கு மரண அடி! சிறுவர்கள் விவகாரத்தில் மெட்டாவுக்கு ₹5,400 கோடி சம்மட்டி அடி!

கடந்த மாதம், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிலிப்பைன்ஸில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தை சந்தித்தபோது, ​​F-16 போர் விமானங்களுக்காக பாகிஸ்தான் வழங்கும் 686 மில்லியன் டாலர் உதவி குறித்த இந்தியாவின் கவலைகளை எழுப்பினார்.

தற்போது பாகிஸ்தானின் வசம் உள்ள F-16 போர் விமானங்கள் நவீன போர் திறன் கொண்டவை அல்ல. அவை மிகவும் பழமையானவை. பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படவில்லை. பாகிஸ்தானவசம் உள்ள சுமார் 70 எஃப்-16 போர் விமானங்கள் மிகவும் பழமையானவை, நவீன போர் திறன் அற்றவை என்ற நிலை மாறி, இந்த புதிய திட்டத்தின் மூலம் அவை அதிநவீன தாக்குதல் இயந்திரங்களாக மாற்றப்படவுள்ளன.

பாகிஸ்தான் பெறும் 92 லிங்க்-16 அமைப்புகள், அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் மிகவும் பாதுகாப்பான வலையமைப்பாகும். இது விமானிகள் பறக்கும்போது தரைப்படைகள் மற்றும் கடற்படைக் கப்பல்களுடன் துல்லியமான, பாதுகாப்பான நிகழ்நேரத் தொடர்பைப் பேணவும், பிற பாகிஸ்தானிய விமானங்களுக்குத் துல்லியமாக வழிகாட்டவும் பேருதவியாக இருக்கும்.

இதையும் படியுங்க  தொட்டு பார்க்க நினைத்தால் ரத்த ஆறு ஓடும்..! அமெரிக்காவுக்கு கியூபா கடும் எச்சரிக்கை..!

இந்தத் திட்டம் உதிரிபாகங்கள், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு ஆதரவை வழங்குவதன் மூலம், எஃப்-16 விமானங்களின் சேவை ஆயுளை மேலும் 15 ஆண்டுகளுக்கு (2040 வரை) நீட்டிக்கிறது. சோதனைகளுக்காக வழங்கப்படும் ஆறு செயலற்ற Mk-82 500-பவுண்டு குண்டு உடல்களில் வெடிபொருட்கள் இல்லாவிட்டாலும், இவை F-16 விமானங்களில் லேசர் அல்லது செயற்கைக்கோள் வழிகாட்டப்பட்ட துல்லிய ஆயுதங்களைச் சோதித்துப் பார்க்கப் பாகிஸ்தானுக்குப் பெரிதும் உதவும். இது இந்தியாவிற்குக் குறி வைக்கப்பட்ட மிக மோசமான நகர்வாகும்.

“இந்த மேம்படுத்தல் பாகிஸ்தானுக்குப் புதிதாக அணு குண்டுகளை வழங்காவிட்டாலும், அமெரிக்க உளவு நிறுவனங்களால் நீண்ட காலமாக பாகிஸ்தானின் அணு ஆயுத ஏவுதள விருப்பங்களின் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட தளங்களை இது கணிசமாக நவீனமயமாக்குகிறது” என்று புது தில்லியைச் சேர்ந்த இண்டிக் ரிசர்ச்சர்ஸ் ஃபோரம் ஆய்வாளர் சீனிவாசன் பாலகிருஷ்ணன் SCMP பத்திரிகையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா நேரடியாக அணு ஆயுதங்களை வழங்கவில்லை என்றாலும், எஃப்-16 விமானங்களின் வழிசெலுத்தல், மின்னணுப் போர் மற்றும் தகவல் தொடர்பு திறன்கள் அபரிமிதமாக மேம்படுத்தப்படுவதால், இந்தியாவிற்கு எதிராக அணு ஆயுதத் தாக்குதலைத் தொடுக்கும் பாகிஸ்தானின் தந்திரோபாயத் திறன் பன்மடங்கு அதிகரிக்கிறது. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு விடப்பட்டுள்ள நேரடிச் சவாலாகும்.

இதையும் படியுங்க  அரபு நாடுகளுக்கு ஈரானின் பகிரங்க மிரட்டல்! அமெரிக்காவின் அதிரடி 'சீக்ரெட் ஆபரேஷன்'.. மீண்டும் உலகப்போர் அபாயம்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *