சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதில் இருந்தே எடப்பாடி பழனிசாமி மீது சீனியர் மாவட்ட செயலாளர்கள், முக்கியத் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்த எதிர்ப்பு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவிற்குள் ஒரு பிரம்மாண்டமான அணி திரண்டுள்ளது.
எடப்பாடிக்கு எதிராகத் திரண்ட 28 எம்.எல்.ஏ.க்கள்
அதிமுகவில் மொத்தமுள்ள 47 எம்.எல்.ஏ.க்களில் ஏற்கனவே 6 பேர் அதிகாரப்பூர்வமாக விலகிய நிலையில், எடப்பாடி பழனிசாமி வசம் தற்போது 41 பேர் உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அதில் சுமார் 28 எம்.எல்.ஏ.க்கள்—அதாவது மூன்றில் இரண்டு பங்கு பலம். இப்போது எஸ்.பி.வேலுமணி பக்கம் முழுமையாகச் சாய்ந்துள்ளது. குறிப்பாக, பாலகோடு எம்.எல்.ஏவும் எடப்பாடியின் தீவிர ஆதரவாளருமான கே.பி.அன்பழகனே எடப்பாடியைக் கழட்டிவிட்டு வேலுமணி அணியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் சி.வி.சண்முகம், தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் கைகோர்த்துள்ளனர்.
வெளியில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மேடைகளில் எடப்பாடிக்கு ஆதரவாகப் பேசினாலும், மறைமுகமாக 28 எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்த ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிவிகே தரப்பு ஆலோசனைகள்
வேலுமணி தரப்பு தவெகவிடம் முன்வைத்துள்ள நிபந்தனைகளின்படி, தங்களுக்கு ஆதரவளிக்கும் 28 எம்.எல்.ஏ.க்களுக்குப் பதிலாக 10 அமைச்சர் பதவிகள் கேட்கப்படுவதாகவும், அதில் சி.வி. சண்முகம், தங்கமணி, வேலுமணி ஆகியோருக்கு முக்கிய இடங்கள் வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், தவெக தரப்பிலோ அதிகபட்சமாக 5 அமைச்சர் பதவிகளை வழங்கலாம் என்று விவாதித்து வருகின்றனர்.
இந்த புதிய 5 அமைச்சர்கள் உள்ளே வரும் பட்சத்தில், சரியாகச் செயல்படாமல் ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் கீர்த்தனா உள்ளிட்ட சில அமைச்சர்களின் பதவிகளைப் பறித்துவிட்டு அந்த இடங்களை இவர்களுக்கு வழங்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே விசிக (2 எம்.எல்.ஏ.க்கள்) மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடங்கள் வழங்கப்பட்டுள்ள சூழலில், வேலுமணியின் 28 எம்.எல்.ஏ.க்கள் அணி இணைந்தால் சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எந்தப் பெரும்பான்மை சிக்கலும் இருக்காது. ஒருவேளை காங்கிரஸ், விசிக வெளியேறினாலும், வேலுமணியின் இந்த ஆதரவு தவெக ஆட்சியை முற்றிலும் பாதுகாக்கும் அரணாக அமையும்.
வேலுமணி அண்டர்ஸ்டாண்டிங்
எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலைச் சந்திப்பது அதிக செலவையும், ரிஸ்க்கையும் தரும் என்பதால், வேலுமணி தரப்பு ஒரு பக்கா லீகல் ஸ்கெட்சை கையில் எடுத்துள்ளது.

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, மொத்த எம்.எல்.ஏ.க்களில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 28 எம்.எல்.ஏ.க்கள் தனியாகப் பிரிந்தால், அவர்களைச் சட்டமன்றத்தில் உண்மையான அதிமுகவாக அங்கீகரிக்க முடியும். சபாநாயகர் முன்னிலையில் இந்த 28 எம்.எல்.ஏ.க்களும் ஆஜராகி ஆதரவு கடிதம் அளித்தால், இவர்கள்தான் உண்மையான அதிமுக என்று அங்கீகரிக்கப்பட்டு, எஸ்.பி.வேலுமணி பிரதான ஆதரவு அமைப்பாகவோ அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
நீதிமன்றத்திற்குச் சென்றாலும் இந்த மூன்றில் இரண்டு பங்கு பலம் செல்லுபடியாகும். தேர்தல் ஆணையமும் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது அறியப்பட்டதே என்பதால், இரட்டை இலைச் சின்னம் வேலுமணி கைக்கே செல்லவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி பொதுப்பொறுப்பையும் எதிர்கட்சித் தலைவர் பதவியையும் இழந்து தனிமைப்படுத்தப்படுவார்.
இந்த அத்தனை அரசியல் நகர்வுகளுக்கும் பின்னணியில் கோவையில் உள்ள ஒரு சக்திவாய்ந்த பவர் சென்டர் அச்சாணியாக இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
