Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் பிணையில் விடுவிக்கக்கூடிய பிடிவாரண்ட் (Bailable Warrant) பிறப்பித்து அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது. சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், அவர் தொடர்ந்து நேரில் ஆஜராவதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சென்னை ஜார்ஜ் டவுன் 3-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுந்தரபாண்டியன், முன்னாள் அமைச்சர் பொன்முடியை செப்டம்பர் 2, 2026-க்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Republic Tamil

இந்த வழக்கு, சென்னை மாநகராட்சியின் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தாக்கல் செய்த தனிநபர் புகார் மனுவின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் பொன்முடி பேசிய உரையில், சைவ மற்றும் வைணவ சமயங்களை இழிவுபடுத்தியும், பெண்கள் குறித்து அவதூறாகவும் பேசியதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதையும் படியுங்க  கல்யாண வீட்டில் போய் புலம்பி தள்ளிய ஸ்டாலின், உதயநிதி... மரண பங்கமாய் கலாய்த்த விஜய்…!

. மேலும், அந்தப் பேச்சு மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலும், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் இருந்ததாகக் கூறி, யூடியூப் வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை அணுகினார்.

முதலில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு பின்னர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி 23, 2026 அன்று இந்த வழக்கை ஜார்ஜ் டவுன் 3-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

Republic Tamil

புதிய பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ், மதத்தின் அடிப்படையில் பகையுணர்வைத் தூண்டுதல், மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் மற்றும் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய கருத்துகள் தனது சொந்தக் கருத்துகள் அல்ல; பல ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்ட வரலாற்றுச் சம்பவத்தை நினைவுகூர்ந்தே பேசியதாக அவர் விளக்கம் அளித்தார்.

இதையும் படியுங்க  அதிர வைக்கும் திமுக-வின் ‘டாப் -8’ ஊழல் ஃபைல்ஸ்..! நாறடிக்க CM விஜய் ஸ்கெட்ச்..! அலறும் அறிவாலயம்..!
Republic Tamil

ஆனால், இந்த வாதத்தை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன், கடந்த ஜூலை 2-ஆம் தேதி அந்த மனுவை தள்ளுபடி செய்தார். அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் தங்களை ராஜாக்கள் அல்லது ராணிகள் போல் கருதக்கூடாது என்றும், அவர்கள் பொதுமக்களிடம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் கடுமையாகக் குறிப்பிட்டிருந்தது.

உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு கோரி பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, தொடர்ந்து ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிணையில் விடுவிக்கக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

Republic Tamil

சட்டப்படி, இந்த பிடிவாரண்ட் பிணையில் விடுவிக்கக்கூடிய வகையைச் சேர்ந்தது என்பதால், பொன்முடி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகி அல்லது தனது வழக்கறிஞர் மூலம் உரிய நடைமுறைகளை பின்பற்றி வாரண்டை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். அவ்வாறு செய்யத் தவறினால் மட்டுமே காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இதையும் படியுங்க  திருமாவுக்கு 'துணை முதல்வர்' பதவி..! ஒரு அமைச்சர் பதவி..! விஜயிடம் விசிக டிமாண்ட்..!

இந்த சர்ச்சைக்குரிய பேச்சு வெளியானபோது, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியும் அதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொன்முடியை கட்சிப் பொறுப்பிலிருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கி நடவடிக்கை எடுத்தார்.

Republic Tamil

மேலும், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், பொன்முடி ஆஜராகாத காரணத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago