Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திரியா கிளப் மற்றும் அல்-உலா கிளப் அணிகளுக்கு இடையே சவூதி அரேபியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது, தவறுதலாக பந்து முகத்தில் பட்டு அழுத சிறுமிக்கு அணி நிர்வாகம் ஐபேட் உள்ளிட்ட பரிசுகளை வழங்கி ஆறுதல் கூறிய சம்பவம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

சவூதி அரேபியாவில் உள்ள திரியா கிளப் (Diriyah Club) மற்றும் அல்-உலா கிளப் (Al-Ula Club) அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.

அப்போது மைதானத்தில் இருந்து வேகமாக வந்த கால்பந்து ஒன்று எதிர்பாராத விதமாக பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த ஒரு சிறுமியின் முகத்தில் பலமாகப் பட்டது.

இதனால் வலியால் அந்தச் சிறுமி அழுதுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த சம்பந்தப்பட்ட அணி நிர்வாகம் உடனடியாக சிறுமியிடம் சென்று தங்களது வருத்தத்தைத் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.

மேலும், சிறுமியை மகிழ்விக்கும் வகையில் அணி நிர்வாகம் சார்பில் புதிய ஐபேட் (iPad), அணியின் அதிகாரப்பூர்வ விளையாட்டு சீருடை மற்றும் வரவிருக்கும் போட்டிகளுக்கான இலவச நுழைவுச் சீட்டுகள் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

இதையும் படியுங்க  அரபு நாடுகளுக்கு ஈரானின் பகிரங்க மிரட்டல்! அமெரிக்காவின் அதிரடி 'சீக்ரெட் ஆபரேஷன்'.. மீண்டும் உலகப்போர் அபாயம்..?

மைதானத்தில் காயமடைந்த சிறு ரசிகையை உடனடியாக கவனித்து, மதிப்புமிக்க பரிசுகள் வழங்கி ஆறுதல் கூறிய அணி நிர்வாகத்தின் இந்த மனிதநேயச் செயல் தற்போது கால்பந்து ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago