Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Donald Trump

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல் முடிவுகள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிரான மக்களின் கோபமும், அதிருப்தியும் வெளிப்படும் விதமாக அமைந்துள்ளன.

பெரும்பான்மை இழந்த ட்ரம்ப் கட்சி
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. மொத்தம் உள்ள 100 இடங்களில், மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் குடியரசு கட்சி பெரும்பான்மையை இழந்து வெறும் 43 இடங்களை மட்டுமே பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம், ஜனநாயக கட்சி 54 இடங்களை நோக்கி முன்னிலையில் உள்ளது.

435 இடங்களைக் கொண்ட மக்களவையில் பெரும்பான்மைக்குத் தேவையான 218 இடங்களைத் தாண்டி ஜனநாயக கட்சி பெரும்பான்மையை உறுதி செய்துள்ளது.

உடைந்த ட்ரம்பின் கோட்டை
வழக்கமாக குடியரசு கட்சிக்கு வலுவான ஆதரவை வழங்கும் எல்லைப்புற மாகாணங்கள் இந்தத் தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. பல தசாப்தங்களாக ட்ரம்ப் கட்சியின் கோட்டையாக இருந்த டெக்சஸ் மாநிலத்தில் ஜனநாயக கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. டெக்சஸ் வரலாற்றிலும், அமெரிக்க அரசியலிலும் முதல்முறையாக லத்தின் அமெரிக்கப் பின்னணியைக் கொண்ட (மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்ட) பெண்மணி ஒருவர் டெக்சஸ் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

இதையும் படியுங்க  டிரம்பின் மாஸ்டர் பிளான்: சரிகிறது பெட்ரோல் விலை..? அமேய்க்க வசமான வரலாற்றின் மாபெரும் ஒப்பந்தம்..!

சவுத் கரோலினா, அயோவா, கன்சாஸ் போன்ற பல பாரம்பரிய ரிபப்ளிக்கன் மாகாணங்களிலும் ‘ப்ளூ வேவ்’ கட்சியின் நிறம் வீசியுள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடி
அமெரிக்க மக்கள் மத்தியில் இந்தத் தேர்தல் முடிவுகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது பொருளாதாரச் சுமை.
அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி, எரிபொருள் (கேஸ்) விலை தாறுமாறாக உயர்ந்தது. ட்ரம்ப் நிர்வாகம் இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் மீது விதித்த கடுமையான இறக்குமதி வரிகள் அமெரிக்காவிலும் நுகர்வோர் விலையை அதிகரித்து, பொதுமக்களைப் பெரிதும் பாதித்தது.

    ஈரான் போர்- மக்கள் கோபம்
    ட்ரம்ப் நிர்வாகம் தொடங்கிய ஈரான் போர் அமெரிக்காவில் கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. “வெளிநாட்டுப் போர்களுக்குப் போக மாட்டேன்” என்ற வாக்குறுதிக்கு முற்றிலும் மாறாக ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகள் அமெரிக்கர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இந்த ஈரான் போர் தேவையற்றது என்றும், பொருளாதார மந்தநிலைக்கு இதுவே முக்கியக் காரணம் என்றும் மக்கள் கருதுகின்றனர். இதுவே தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளது.

    இதையும் படியுங்க  அதிரடி மாற்றம்: இந்தியாவில் 95% குறைந்த ஊழல் புகார்கள்… CVC ரிப்போர்ட்: முதலிடத்தில் வங்கிகள்!

    குடியேற்றக் கொள்கை மீதான அதிருப்தி
    சட்டவிரோத குடியேற்றங்களைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ட்ரம்ப் நிர்வாகம் எல்லைகளில் கையாண்ட அதீத வன்முறை, மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் சாதாரண பொதுமக்களையும் சிறுபான்மையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதுவே மாகாணத் தேர்தல்களில் ட்ரம்பிற்கு எதிராக மக்கள் வாக்களிக்க முக்கியக் காரணமாக அமைந்தது.

    சிறுபான்மையினரின் எழுச்சி
    இந்தத் தேர்தல் அமெரிக்க அரசியலில் பல புதிய வரலாற்று மைல்கற்களை எட்டியுள்ளது. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கருப்பினத்தைச் சேர்ந்த இவர், அமெரிக்க மக்களவையின் அடுத்த சபாநாயகராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்கப் ப்ரோட்டோகாலில் 3-வது உயர்ந்த பதவி. ஜார்ஜியா, நியூ மெக்சிகோ போன்ற மாநிலங்களில் கருப்பினப் பெண்களும், பூர்வகுடி அமெரிக்கப் பெண்களும் கவர்னர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

    அமெரிக்க வரலாற்றிலேயே வெளிப்படையான ஓரினச் சேர்க்கையாளர் கிரிஸ் பாப்பாஸ் செனட்டராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிச்சிகன் மாகாணத்தில் அப்துல் அல்சையத் செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், அங்கு சட்டமன்றத்திற்குச் செல்லும் முதல் இஸ்லாமியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

    இதையும் படியுங்க  ஈரானுக்கு டிரம்பின் மாபெரும் சலுகை..! வளைகுடா அமைதிப் பேச்சில் திடீர் திருப்பம்..!

    அதிபர் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற இந்த இடைக்காலத் தேர்தல் முடிவுகள், டொனால்ட் ட்ரம்பின் கலாச்சார அரசியலுக்கும், அவரது அதீத கொள்கைகளுக்கும் அமெரிக்க மக்கள் வழங்கிய தெளிவான “சம்மட்டி அடி”யாகவே பார்க்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளிலும் உள்நாட்டு அரசியலிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான சாத்தியத்தை உருவாக்கியுள்ளது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    2 hours ago at 2 hours ago