https://republictn.com/

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

அரசியல் அதிரடித் திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மற்றும் வசனங்களின் அடிப்படையில் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தணிக்கைச் சான்றிதழின்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மொத்த ஓட்ட நேரம் 183.11 நிமிடங்கள், அதாவது 3 மணி நேரம் 3 நிமிடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ளார். நீண்ட தணிக்கை விவாதங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, திரைப்படம் தற்போது திரையிடத் தயாராகியுள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் படம் வெளியாகிறது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தயாரிப்பு தரப்பும், விநியோகஸ்தர்களும் அறிவித்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகமும், பெரும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago