Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ-வுமான சி. விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்ததாகவும், அந்தக் கடிதம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவை அடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் சிலர், “துரோகி விஜயபாஸ்கர் ஒழிக” என கோஷமிட்டு பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த மே 13 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், கட்சியின் கொறடா உத்தரவை மீறி சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதன் பின்னணியில் கட்சிக்குள் அவர் மீது அதிருப்தி அதிகரித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கட்சித் தலைமை குறித்து தனது சமூக வலைத்தளப் பதிவில் அவர் மறைமுகமாக அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், “தலைமை என்பது அதிகாரமோ அல்லது அகங்காரமோ அல்ல; அது அனைவரையும் அரவணைத்துச் செல்வதாக இருக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  கல்யாண வீட்டில் போய் புலம்பி தள்ளிய ஸ்டாலின், உதயநிதி... மரண பங்கமாய் கலாய்த்த விஜய்…!

இதனிடையே, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்யும் 5-வது எம்.எல்.ஏ இவர் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணையக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜயபாஸ்கரின் விலகல் அதிமுக அரசியல் வட்டாரத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago