பிரபல திரைப்பட இயக்குநரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது இளைய மகன் லிங்காவின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்ற அவர், மகன் லிங்காவுடன் இணைந்து சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டார். தனது மகனின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் இந்த வழிபாட்டை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
கோயிலில் அவர்கள் சாமி தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் பல்வேறு ஊடக தளங்களிலும் வேகமாக பரவி வருகின்றன.
