Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

இந்திய கார் பந்தய உலகில் புதிய தொடக்கமாக 2026 தேசிய சாம்பியன்ஷிப்பின் அறிமுகம் மற்றும் லோகோ வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இந்திய கார் பந்தய உலகில் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் நோக்கில், சிடிஆர்-ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026 சென்னையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. “ஒரே சாம்பியன்ஷிப், ஒரே தேசிய பட்டம்” என்ற அடிப்படையில் நடைபெற உள்ள இந்தப் போட்டித் தொடரின் அறிமுக விழாவில் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். எஃப்ஐஏ உலக மோட்டார் விளையாட்டு கவுன்சில் உறுப்பினரும், எஃப்ஐஏ சர்வதேச கார்ட்டிங் ஆணையத் தலைவருமான அக்பர் இப்ராஹிம், FMSCI தலைவரான அரிந்தம் கோஷ், சென்னை டர்போ ரைடர்ஸ் இயக்குநரும் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஸ்வேதா சுந்தீப் ஆனந்த், ஜேகே டயர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் இயக்குநர் ஸ்ரீனிவாசு அல்லாபன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவர்களுடன் FMSCI கவுன்சிலர்கள், சாம்பியன்ஷிப் அணிகள் மற்றும் மோட்டார்ஸ்போர்ட் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் முன்னிலையில் சிடிஆர்-ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026-க்கான லோகோ வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் அம்பாசிட்டராக பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரான மா.கா.பா. நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்க  Experience Ultimate Realism with Our King Cock DildoThis dildo

“ஒரே சாம்பியன்ஷிப், ஒரே தேசிய பட்டம்” அம்பாசிட்டராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரபல தொகுப்பாளர் மா.கா.பா. கூறுகையில், “சிங்கப்பூரில் கொட்டும் மழையில் நடக்கும் ரேசிங்கை நேரில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பது என் மனைவியின் நீண்ட நாள் ஆசை. ஆனால் அதற்கு சரியான தருணம் அமைவதில்லை. சில நேரங்களில் ஷுட்டிங் இருக்கும், சில சமயங்களில் கையில் பணம் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு கார் ரேஸ் இந்தியாவில், அதுவும் நம்மோட தமிழ்நாட்டில் நடக்கிறது என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் சைடு மிரர், ஹெல்மெட் பயன்படுத்துவது கிடையாது. அப்படிப்பட்ட தருணத்தில் ஜேகே டயர்ஸ் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. நான் எப்போதுமே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மிக்கவன். ஆனால் டிரைவர் ஓட்டினால் வேகமாக ஓட்டச் சொல்லி, அந்த வேகத்தை என்ஜாய் செய்வேன்” என்றார்.

1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சாம்பியன்ஷிப், இந்தியாவின் முதன்மையான சர்க்யூட் கார் பந்தயத் தொடராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக், அர்மான் இப்ராஹிம், ஆதித்யா பட்டேல் மற்றும் குஷ் மைனி உள்ளிட்ட பல முன்னணி பந்தய வீரர்கள் உருவாகியுள்ளனர். அந்த வரிசையில், புதிய தலைமுறை வீரர்களுக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் 2026-ம் ஆண்டு சாம்பியன்ஷிப் அமைய உள்ளது.

இதையும் படியுங்க  Join 1000's of glad customers from over 60 international

சென்னை டர்போ ரைடர்ஸ் மற்றும் ஜேகே டயர் நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப், இந்திய மோட்டார்ஸ்போர்ட் சூழலியலை மேலும் வலுப்படுத்துவதோடு, அடிமட்ட நிலையில் இருந்து தொழில்முறை போட்டிகள் வரை திறமையான பந்தய வீரர்களை உருவாக்கும் முக்கிய தளமாக செயல்பட உள்ளது.

இதுகுறித்து ஜேகே டயர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் இயக்குநர் ஸ்ரீனிவாசு அல்லாபன் கூறுகையில், “கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப், இந்திய மோட்டார்ஸ்போர்ட்டின் வளர்ச்சிக்கான ஜேகே டயரின் அர்ப்பணிப்பின் மையமாக இருந்து வருகிறது. பல தலைமுறைகளைச் சேர்ந்த திறமையான பந்தய வீரர்களுக்கு போட்டியிடவும், விளையாட்டின் உயர் நிலைகளுக்கு முன்னேறவும் இந்த சாம்பியன்ஷிப் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. 2026 பருவத்தை எதிர்நோக்கும் நிலையில், சென்னை டர்போ ரைடர்ஸ் மற்றும் FMSCI உடன் இணைந்து வளர்ந்து வரும் திறமைகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

2026-ம் ஆண்டுக்கான தற்காலிக பந்தய அட்டவணையில் மொத்தம் நான்கு சுற்றுகள் இடம்பெற்றுள்ளன. முதல் இரண்டு சுற்றுகள் செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரையும், அக்டோபர் 23 முதல் 25-ம் தேதி வரையும் கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற உள்ளன.

இதையும் படியுங்க  Our low cost choices include fast USB-C charging

அடுத்ததாக, மூன்றாவது சுற்று நவம்பர் 13 முதல் 15-ம் தேதி வரை பெங்களூருவில் உள்ள பிரென் ரேஸ்வேயில் நடைபெறுகிறது. சாம்பியன்ஷிப்பின் நான்காவது மற்றும் இறுதிச்சுற்று டிசம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற உள்ளது.

இந்தியாவில் மோட்டார்ஸ்போர்ட்டை வளர்ப்பதிலும், அதன் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதிலும் ஜேகே டயர் மோட்டார்ஸ்போர்ட் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக முக்கிய பங்காற்றி வருகிறது. உலகத் தரத்திலான போட்டித் தளங்களை உருவாக்குவதுடன், மோட்டார்ஸ்போர்ட்டில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கான சிறப்பு முயற்சிகளையும் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.

மறுபுறம், சென்னை டர்போ ரைடர்ஸ் (CTR) தொழில்முறை மோட்டார்ஸ்போர்ட் அணியாகவும், மோட்டார்ஸ்போர்ட் சூழலியல் அமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டு தனது அறிமுகப் பருவத்திலேயே F4 இந்திய சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை டர்போ ரைடர்ஸ் வென்றது குறிப்பிடத்தக்கது. அடிமட்ட பந்தயங்களில் தொடங்கி தொழில்முறை போட்டிகள் வரை திறமைகளை உருவாக்கி, அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட தளத்தையும் சென்னை டர்போ ரைடர்ஸ் தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago

You missed