Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

vijay Stalin

தவெக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, முதலமைச்சர் விஜய் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்க்கட்சிகளை அதிர வைத்து வருகிறது.

அந்த வகையில், ஜூலை 13 ஆம் தேதி பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ அலுவலகத்தைத் திறந்து வைத்து, ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி, எலக்ட்ரிக் பேருந்துகளைப் பார்வையிட்ட சிஎம் விஜய்யின் ‘கிரவுண்ட் விசிட்’ பெரும் வரவேற்பைப் பெற்றது. பெரம்பூர் டூர் முடிந்து கோட்டைக்குத் திரும்பிய கையோடு, தவெகவின் அத்தனை எம்.எல்.ஏ-க்களுக்கும், அமைச்சர்களுக்கும் சிஎம் ஆபீஸில் இருந்து பறந்த அதிரடி உத்தரவுகளும், எச்சரிக்கைகளும் தான் இப்போது கோட்டை வட்டாரத்தின் ஹாட் டாபிக்

மக்களோடு மக்களாக நில்லுங்கள்
“முதலமைச்சர் தன் தொகுதியில் எப்படி இறங்கி வேலை செய்கிறாரோ, அதைவிட டபுள் மடங்காக அனைத்து எம்.எல்.ஏ-க்களும் தத்தம் தொகுதிகளில் களப்பணியாற்ற வேண்டும்” என்பதுதான் சிஎம் ஆபீஸின் முதல் அசைன்மென்ட். எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளைத் ரேண்டமாக திடீர் ஆய்வு செய்ய வேண்டும்.

இதையும் படியுங்க  விஜய் பற்றி இவ்வளவு கீழ்த்தரமாவா கேட்பீங்க..? வரம்பு மீறிய சேட்டை..! வாயடைத்த மாளவிகா மோகனன்..!

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரேஷன் கார்டுகளைக் கண்டறிந்து, அவற்றை தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் முன்னின்று மக்களுக்கு விநியோகம் செய்ய உடனடி ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர்களை அதிரவைத்த எச்சரிக்கை
ஜூலை 14 அன்று நடைபெற்ற கேபினெட் மீட்டிங்கிற்கு முன்னதாக, அமைச்சர்களுக்கு சிஎம் விஜய் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட வார்னிங் தான் தவெக வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது. “அமைச்சர்களைச் சுற்றி என்னென்ன நடக்கிறது என்பதை அக்கு வேற ஆணி வேறாக சிஎம் கண்காணித்து வருகிறார். நாம் செய்வதை சிஎம் கவனிக்கவில்லை என்று நினைத்து யாரும் எல்லை மீறிப் போக வேண்டாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். குறிப்பாக போலீஸ் அதிகாரிகளிடம் டீல் செய்யும்போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்” என கறாராகச் சொல்லப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் விஜய் எந்த அளவுக்கு நேர்மையாக இருக்கிறாரோ, அதே நேர்மையை அமைச்சர்களிடமும் நூறு சதவீதம் எதிர்பார்க்கிறார் என்பது இந்த வார்னிங் மூலம் தெளிவாகியிருக்கிறது.

இதையும் படியுங்க  "ICU-வில் வி.எஸ். பாபு.. நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! அதிரடி போலீஸ் குவிப்பால் உச்சக்கட்ட பரபரப்பு!"

திமுகவின் வீடியோ ஸ்கெட்ச்
இந்த எச்சரிக்கைக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய புவிசார் அரசியல் சதித் திட்டமும் ஒளிந்திருக்கிறது. தவெக அமைச்சர்களை எப்படியாவது ஊழல் வலையில் சிக்க வைக்க வேண்டும் என எதிர்க்கட்சியான திமுக தரப்பு தீவிரமாக காய் நகர்த்தி வருவதாக உளவுத்துறை மூலம் சிஎம் கைக்கு பிரத்தியேக அலர்ட் தகவல்கள் கிடைத்துள்ளன.

பல்வேறு நபர்கள் மூலமாக தவெக அமைச்சர்களை அணுகி, ஆசை வார்த்தைகள் பேசி, கட்டுக்கட்டாகப் பணத்தைக் காட்டி பேரம் பேசுவது போலவும், அதை ரகசிய கேமராக்கள் மூலம் வீடியோ பதிவு செய்து, பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் நேரத்தில் வெளியிட்டு ஆட்சிக்கே அவப்பெயர் ஏற்படுத்த திமுக தரப்பில் ரகசிய ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்தே முதலமைச்சர் விஜய் அத்தனை அமைச்சர்களுக்கும் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். “பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள இந்தச் சூழலில், அமைச்சர்கள் யாரும் எந்தவொரு தனி நபரையும் அரசியல் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ சந்திக்கக் கூடாது. சந்தேகத்திற்குரிய எந்தவொரு பணப் பரிவர்த்தனையிலும் ஈடுபடக் கூடாது. யாராவது உங்களை அப்படி அணுக முயன்றால், அடுத்த விநாடியே அதை சிஎம் ஆபீஸிற்குத் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க  விஜய் ஆட்சியை ஆக்கிரமிக்கும் திமுக-அதிமுக ஐஏஎஸ்-கள் லாபி..! மாற்றம் எப்படி வரும் முதல்வரே..!?

திமுகவின் இந்த ரகசிய வீடியோ ஆபரேஷனை முன்கூட்டியே மோப்பம் பிடித்து, தன் அமைச்சரவைக்கு சிஎம் விஜய் விடுத்துள்ள இந்த ஹை வோல்டேஜ் எச்சரிக்கை, தவெக ஆட்சியை அசைத்துப் பார்க்க நினைத்த எதிர்க்கட்சியினருக்கு முன்கூட்டியே வைக்கப்பட்ட பெரிய செக் அண்ட் மேட் ஆகப் பார்க்கப்படுகிறது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago