https://republictn.com/

தேர்தல் தோல்விக்குப் பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை இழந்த திமுக, இப்போது அண்ணா அறிவாலயத்தை மையமாக வைத்துத் தங்களின் அடுத்த அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. அந்த ஆட்டத்தின் மையப் புள்ளியாக, ஒட்டுமொத்தத் தொண்டர்களின் நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார் கனிமொழி.

“தேர்தலுக்கு முன்னால் நாம் எதிர்பார்க்கும் முடிவுகள் வருமா என்பது சந்தேகம்தான்… த.வெ.க-வின் செல்வாக்கை நாம் சாதாரணமாகக் குறைத்து மதிப்பிடக் கூடாது” என்று தேர்தல் வியூகங்களின் போதே திமுக தலைமைக்கு எச்சரிக்கை மணி அடித்தவர் கனிமொழி. அன்று அவரது பேச்சை ஆளுங்கட்சி மிரட்சியில் இருந்த திமுகவினர் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், தேர்தல் முடிவுகள் த.வெ.க-வுக்குச் சாதகமாக மாறி, திமுக எதிர்க்கட்சி நாற்காலியில் அமர்ந்த பிறகுதான், கனிமொழியின் தீர்க்கதரிசனம் எவ்வளவு உண்மை என்பது தலைமைக்குப் புரிந்திருக்கிறது.

நிரம்பி வழியும் தொண்டர்கள் படை
தேர்தல் தோல்விக்குப் பிறகு தொண்டர்கள் சோர்வடைந்துவிடக் கூடாது என்பதில் கனிமொழி மிகத் தீவிரமாக இருக்கிறார். இப்போது தினசரி ரெகுலராக அண்ணா அறிவாலயத்திற்கு விசிட் அடிக்கும் கனிமொழி, வெளியூர்களில் இருந்து தங்களின் குமுறல்களைச் சொல்ல வரும் அடிமட்டத் தொண்டர்கள் ஒருவரைக் கூடத் தவிர்க்காமல், அனைவரையும் நேரில் சந்தித்துப் பேசி அனுப்பி வருகிறார்.

இதன் காரணமாகவே, அறிவாலயத்தில் கனிமொழிக்காக ஒதுக்கப்பட்ட அறையின் வாசல் எப்போதும் கட்சிக்காரர்களால் திருவிழாக் கூட்டம் போல் நிரம்பி வழிகிறது. தலைமை தங்களை உதாசீனப்படுத்தியபோது ஓடிவந்து தங்களுக்கு அடைக்கலம் தருவது ‘கனிமொழி அக்கா’ தான் என்று தொண்டர்கள் மத்தியில் ஒரு புதிய அலை உருவாகியுள்ளது.

உதயநிதி – கனிமொழி கூட்டணி
திமுகவின் இந்தத் திடீர் மறுசீரமைப்பில் மிக முக்கியமான ட்விஸ்ட் என்னவென்றால், இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின், இப்போது உட்கட்சி விவகாரங்கள் மற்றும் மிக முக்கியமான அரசியல் முடிவுகள் எடுப்பதற்கு முன்பாகக் கனிமொழியோடு விரிவாக ஆலோசிக்கத் தொடங்கியுள்ளார்.

கடந்த காலங்களில் நிலவி வந்த சில பனிப்போர்கள், இடைவெளிகளைத் தகர்த்து, த.வெ.க-வின் அசுர வளர்ச்சியைத் தடுக்க ‘அத்தை- மருமகன்’ இருவரும் கைகோர்த்திருப்பது திமுக வட்டாரத்தையே உற்று நோக்க வைத்துள்ளது. கனிமொழியின் பழுத்த அரசியல் அனுபவமும், அடிமட்டத் தொண்டர்களை அரவணைக்கும் பக்குவமும் இப்போது உதயநிதிக்கும் தேவைப்படுகிறது என்பதே இந்த ஆலோசனைகளின் பின்னணி.

ஸ்டாலின் போடும் புதிய ஸ்கெட்ச்
திமுகவை அடிமட்டத்திலிருந்து முழுமையாகச் சீரமைக்காமல் த.வெ.க-வின் சவாலை எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்த மு.க.ஸ்டாலின், கனிமொழிக்கு மாநில அளவில் மிகப்பெரிய, அதிகாரமிக்க பதவி ஒன்றைக் கொடுக்கப் போகிறார் என்ற அதிரடித் தகவல் தற்போது கசிந்துள்ளது.

திமுகவில் பெண்களின் வாக்கு வங்கியை மீண்டும் மீட்டெடுக்கவும், தென் மாவட்டங்களில் கட்சியின் செல்வாக்கை உயர்த்தவும் கனிமொழிக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. இதன் முன்னோட்டமாகத்தான் அறிவாலயத்தில் அவருக்குக் கூடியிருக்கும் முக்கியத்துவமும், உதயநிதியின் திடீர் ஆலோசனைகளும் பார்க்கப்படுகின்றன.

த.வெ.க அரசு அமைந்து 60 நாட்களைக் கடந்த நிலையிலும், அடுத்தடுத்த தேர்தல்களைச் சந்திக்க திமுக தங்களை உஷார்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மாற்றம், கூட்டணிக் கட்சிகளின் குமுறல் எனத் த.வெ.க அரசு சில சலசலப்புகளைச் சந்தித்து வரும் வேளையில், திமுக தன் உட்கட்சிப் பலத்தை கனிமொழி மூலம் அதிகரிக்கப் பார்ப்பது த.வெ.க-வுக்குக் கொடுக்கப்படும் மறைமுக செக் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago