Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக் தவெக எம்.எல்.ஏ.க்களை வளைக்க முயன்ற விவகாரம்தான். கடந்த ஜூன் 23-ஆம் தேதி பேசப்பட்ட “தவெக எம்.எல்.ஏ.க்களை தூக்கிய செந்தில் பாலாஜி” விவகாரம், தற்போது போலீஸ் விசாரணை மற்றும் கைதுகளால் விஸ்வரூபம் எடுத்து தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த வழக்கில் இதுவரை 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த குதிரை பேர விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக்குமாருக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், அமைச்சர் நிர்மல்குமார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துச் சாடினார். இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் தற்போது திமுகவிற்குள் சாதாரண பேசுபொருளாக மட்டுமில்லாமல், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் பெரும் ‘குமுறலாகவே’ வெடித்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக மா.செ.க்கள் சிலரிடம் இதுகுறித்து விரிவாகப் பேசியபோது, அவர்கள் தங்களின் மனதில் உள்ள குமுறல்களைப் பின்வருமாறு கொட்டித் தீர்த்தனர்

சர்ச்சை நாயகன் செந்தில் பாலாஜி
“செந்தில் பாலாஜியோட ஒவ்வொரு ஆக்‌ஷனுமே நம்ம பாலிட்டிக்ஸ்ல ஆரம்பத்துல இருந்தே கான்ட்ரவர்சியாகத்தான் இருக்குது. அவர் அதிமுகவில இருந்தப்ப போக்குவரத்துத் துறை அமைச்சரா இருந்தார். அப்பவே அவர் முதலமைச்சர் நாற்காலிக்கு ஆசைப்பட்டார், கனவு கண்டார்னு சொல்லிதான் ஜெயலலிதா அவரை ஓரம்கட்டி வெச்சாங்கன்னு அரசியல் வட்டாரத்துல சொல்லுவாங்க. அப்பவே செந்தில் பாலாஜியின் டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மெண்ட்ல மிகப்பெரிய வேலைவாய்ப்பு முறைகேடு புகார்கள் வெடிச்சது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது கரூரில் வச்சு செந்தில் பாலாஜியை நம்ம தலைவர் மு.க.ஸ்டாலினும் பயங்கரமா வெளுத்தெடுத்தார். அந்த வீடியோக்கள் இப்ப வரைக்கும் சோஷியல் மீடியால ரொம்ப பாப்புலர்.”

திமுகவில் அசுர வளர்ச்சி – ’10 ரூபாய்’ சர்ச்சை
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடிக்கு எதிராக டிடிவி தினகரன் ஆரம்பித்த அமமுக டீமில் நம்பர் 2-வாக வலம் வந்த செந்தில் பாலாஜி, அங்கிருந்து விலகி கடந்த 2018-ல் திமுகவுக்கு வந்தார்.

அரசியல் வளர்ச்சி: திமுகவில் சேர்ந்த பின்னாடி 2019 இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் மறுபடியும் போட்டியிட்டு ஜெயிச்சு எம்.எல்.ஏ.வானார். தொடர்ந்து 2021 பொதுத்தேர்தலில் கரூர் தொகுதிக்கு மாறி அங்கேயும் ஜெயிச்சாரு. ஸ்டாலின் கேபினட்டில் யாருக்கும் கிடைக்காத மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை போன்ற ரொம்பவே வலுவான இரண்டு துறைகளுக்கு மினிஸ்டராகிட்டார்.

டாஸ்மாக் டேமேஜ்: செந்தில் பாலாஜி அமைச்சரான பின்னாடிதான் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குற பழக்கமே ஆரம்பிச்சதுன்னு சொல்லலாம். அதே மாதிரி தமிழ்நாடு முழுக்க எல்லா டாஸ்மாக் பார்களும் செந்தில் பாலாஜியோட ‘கரூர் கம்பெனி’ கட்டுப்பாட்டுலதான் இருந்துச்சு. இந்த 10 ரூபாய் விவகாரம் அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் திமுகவை மக்கள் மத்தியில ரொம்பவே டேமேஜாக்கிடுச்சு. இப்ப நடந்து முடிந்த எலக்‌ஷன்ல கூட இந்த பாட்டிலுக்கு ரூ.10 விவகாரம்தானே நமக்கு எதிராக அதிகமா பேசப்பட்டுச்சு.

உள்ளூர் நிர்வாகிகளின் அதிருப்தி
செந்தில் பாலாஜி டாஸ்மாக்கை கம்ப்ளீட்டா 5 வருஷம் தன் கண்ட்ரோலில் வச்சிருந்ததால உள்ளூர் திமுககாரங்களுக்கு தலைமை மீது ரொம்பவே அதிருப்தியாகிடுச்சு. கட்சி ஆட்சிக்கு வந்தும் தங்களால வருமானம் பெருசா பார்க்க முடியலையேங்கிற வருத்தம் அடிமட்டத் தொண்டர்கள் வரைக்கும் இருந்துச்சு.

இந்த அதிருப்தியைச் சரி செய்யுற மாதிரி எலக்‌ஷனுக்கு முன்னாடி கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் டைம்ல கொஞ்சம் பணம் கொடுக்கப்பட்டுச்சு. ஆனா, அதனால எல்லாம் கட்சிக்காரங்க முழுசா திருப்தி அடையல.

“இதை எல்லாம் எங்களை மாதிரி மா.செ.க்கள்கிட்ட தொண்டர்கள் சொல்றாங்க.. நாங்களும் மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள்கிட்ட கொண்டு போனாலும், ‘செந்தில் பாலாஜியை பத்தி நாம எப்படி பேசுறது? அதெல்லாம் மேலிடத்து விவம்மா, அவங்க பாத்துக்குவாங்க’ன்னு ஒதுங்கிக்கிறாங்க. இன்னும் ஓப்பனா சொன்னா செந்தில் பாலாஜியை பத்திப் பேசவே மத்த அமைச்சர்கள் எல்லாம் பயந்தாங்கன்னுதான் சொல்லனும்.”

தவெக ஆட்சி கவிழ்ப்பு ஸ்கெட்ச்
அதிமுக ஆட்சிக் காலத்துல செந்தில் பாலாஜி டிரான்ஸ்போர்ட் மினிஸ்டரா இருந்தப்ப நடந்த முறைகேடு வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த கேஸில்தான் திமுக ஆட்சியில் மந்திரியா இருந்தப்ப அமலாக்கத்துறை அதிரடி ஆக்‌ஷன் எடுத்து அவரை கைது செஞ்சுச்சு. செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப ஸ்டாலினின் ஒட்டு மொத்த குடும்பமும் நேர்ல போய் பார்த்தாங்க.

அவரு ஜெயில்ல இருந்து பிணையில் வந்த பிறகு மறுபடியும் அமைச்சரானாரு. ஆனா உச்சநீதிமன்றம் கறாரான உத்தரவுகளைப் போட்டதால வழக்கை எதிர்கொள்ள அமைச்சர் பதவியில இருந்து விலக நேரிட்டது.

இப்ப தேர்தல் முடிஞ்சு தவெகவுக்கு தனிப் பெரும்பான்மைக்கான இடங்கள் கிடைக்காத சூழலில், செந்தில் பாலாஜிதான் எஸ்பி வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம்னு அதிமுகவின் முக்கிய புள்ளிகள்கிட்ட பேசி, “எடப்பாடியை சிஎம் ஆக்குவோம்.. திமுக அதுக்கு வெளியில இருந்து ஆதரவு தரட்டும்.. நீங்க கேபினட் அமைச்சர்களாகிடுங்க”ன்னு ஒரு ஆபரேஷனை முயற்சி செஞ்சாரு. அப்பவே தவெக எம்.எல்.ஏக்கள் சிலர்கிட்டேயும் பேசி 2 பேருக்கு ‘அட்வான்ஸ்’ கூட வைச்சுட்டதா சொல்லிகிட்டு இருந்தார். ஆனா அந்த ஆபரேஷன் டோட்டலா ‘பேக் பயர்’ ஆகி ஃபெயிலியர் ஆயிடுச்சு.

ரூ.35 கோடி பேரம் – ‘கரூர் அண்ணன்-தம்பி’
அதிமுக ஆபரேஷன் தோற்றாலும் செந்தில் பாலாஜி ஓஞ்சு போகல. விஜய் அரசு மீது 6 மாசத்துக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாது என்ற விதி இருந்தாலும், ‘சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்’ கொண்டு வந்து தந்திரமாக ஆட்சியை கவிழ்க்க முடியும்னு இன்னொரு மாஸ்டர் ஸ்கெட்ச் போட்டார். இந்த ஸ்கெட்ச் விவகாரம்தான் இன்னைக்கு பூதாகரமாக வெடிச்சிருக்கு. தவெக எம்.எல்.ஏக்களை இழுக்க ரூ.35 கோடி பேரம் பேசுனதா பிரச்சனை ஆதாரங்களோடு வெளியே வந்துருக்கு.

செந்தில் பாலாஜியோட ஒவ்வொரு அரசியல் ஆக்‌ஷனுக்கும், ரகசிய ஆபரேஷனுக்கும் பின்னாடி மூளையாகவும் உயிராகவும் இருக்கிறதே அவரது தம்பி அசோக்குமார்தான். இப்ப தவெக எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசுன கேஸிலேயும் போலீஸ் எப்.ஐ.ஆரில் அசோக்குமார் பேருதான் முதன்மையா வருது. அண்ணன், தம்பி ரெண்டு பேருமே அதிகாரத்தைக் கைப்பற்ற, தக்க வைக்க எல்லா எல்லைகளுக்கும் போவாங்க.

“செந்தில்பாலாஜியை தொடக்கத்திலேயே கட்சித் தலைமை ‘வைக்க வேண்டிய இடத்துல’ கறாரா வெச்சிருந்தா, இன்னைக்கு திமுகவுக்கு இவ்வளவு பெரிய சிக்கலும் கெட்ட பேரும் வந்திருக்காது” என்பதே திமுக மாவட்டச் செயலாளர்களின் தற்போதைய ஒட்டுமொத்த குமுறலாக உள்ளது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago