திருப்பத்தூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம், தர்மபுரி மண்டலத்திற்குட்பட்ட திருப்பத்தூர் அரசு பேருந்து பணிமனையில் தற்காலிக ஓட்டுனர் மற்றும் நடத்துனராக 87 பேர் கடந்த 2005 மார்ச் மாதம் ஒப்படைக்கப்பட்ட டீம் போர்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் ஒப்பந்த அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2026 ஜனவரி மாதம் முதல் பி.எஃப், இ.எஸ்.ஐ ஆகியவை பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் தற்காலிக பணியில் சேர்ப்பதற்காக பி.எம் செல்வகுமார் என்பவர் ஒவ்வொரு நபரிடமும் 20,000 பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்காலிக பணியில் பணியாற்றி வரும் 87 ஓட்டுநர் மற்றும் நடத்தினர் உடல்நிலை சரியில்லாத நேரங்களிலும், குடும்ப சூழ்நிலை காரணமாக விடுமுறை எடுத்தாலும் அவர்களை மறுநாள் வேலைக்கு வர வேண்டாம் என கூறுவதாகவும், மேலும் அவர்களை அவதூறாக பேசி மிரட்டும்வதாகவும் கூறப்படுகிறது.
மேலும் நாங்கள் வேலையை விட்டு போகணும் என்றால் நாங்கள் கொடுத்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுங்கள் என கேட்டால் அதெல்லாம் கொடுக்க முடியாது என அலட்சியமாக பேசுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தற்காலிகமாக பணியாற்றி வரும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உள்ளிட்ட 50 பேரை வேலையில் இருந்து வெளியே போகுமாறு கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தற்காலிக நடத்துனர் மற்றும் ஓட்டுநர் திருப்பத்தூர் அரசு பேருந்து பணிமனை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது
