Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் வரலாற்றை மட்டுமன்றி தேசிய அளவிலான கூட்டணிக் கணக்குகளையும் தலைகீழாக மாற்றியமைத்துள்ளது. புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் தவெக அரசுக்கு காங்கிரஸ் கட்சி திடீரென ஆதரவு தெரிவித்து அமைச்சரவையிலும் பங்கெடுத்துள்ளதால், திமுக-காங்கிரஸ் இடையேயான 20 ஆண்டுகால இணக்கமான உறவில் மிகப்பெரிய விரிசல் விழுந்துள்ளது.

காங்கிரஸின் இந்த ‘திடீர்’ டிராக்கிற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், தங்களைத் தனிமைப்படுத்தும் முயற்சியை முறியடிக்கவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அரசியல் வியூகத்தை மாநில அளவிலிருந்து தேசிய அளவிற்கு அதிரடியாக மாற்றத் திட்டமிட்டுள்ளார்.

காங்கிரஸ் கொடுத்த ‘கை’முறிவு
தமிழகத்தில் தவெக- காங்கிரஸ் கூட்டணி அமைந்திருப்பது, 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்குப் பெரும் சவாலாக மாறும் என்பதை திமுக தலைமை உணர்ந்துள்ளது. டெல்லி காங்கிரஸ் மேலிடத்தின் இந்த ‘இரட்டை நிலைப்பாட்டால்’ கடுப்படைந்துள்ள திமுக, அண்மையில் டெல்லியில் நடந்த ‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களைப் புறக்கணித்துத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது. ஆனாலும், தேசிய அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கிவிடாமல், காங்கிரஸைத் தாண்டி டெல்லியில் உள்ள பிற செல்வாக்குமிக்க மாநிலக் கட்சிகளைத் தன் பக்கம் இழுக்க மு.க.ஸ்டாலின் புதிய அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளார்.

தேசிய அளவில் காங்கிரஸின் ஆதிக்கத்தைக் குறைத்து, மாநிலக் கட்சிகளின் குரலை வலுப்படுத்த நினைக்கும் பிற மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைவர்களுடன் நேரடியாக ஒரு வலுவான நட்புறவை உருவாக்கத் திமுக கணக்கு போடுகிறது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸை ஆரம்பம் முதலே எதிர்த்து வரும் மம்தா பானர்ஜியுடன் திமுக தனது நெருக்கத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் வலுவான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் நேரடித் தொடர்புகளை அறிவாலயம் பலப்படுத்தி வருகிறது.

டெல்லி மற்றும் பஞ்சாபில் காங்கிரஸுக்கு மாற்றாக இருக்கும் ஆமத்மி கட்சியுடனும் திமுக கரம் கோர்க்கத் திட்டமிட்டுள்ளது. தேசிய அளவில் காங்கிரஸை முதன்மைப் படுத்தாமல், மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு ‘மூன்றாவது சக்தி’ போலச் செயல்பட்டு, காங்கிரஸிற்கு அழுத்தம் கொடுப்பதே ஸ்டாலினின் தற்போதைய ரகசியத் திட்டம்.

39 தொகுதிகளையும் மீட்கும் ‘மாஸ்டர் மூவ்
‘சட்டமன்றத் தேர்தலைத் தவறவிட்டாலும், திமுகவின் கட்டுக்கோப்பான 30%-க்கும் அதிகமான வாக்கு வங்கி இன்னும் சிதறாமல் அப்படியே உள்ளது. அண்மையில் திருவாரூரில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுக தனித்து களம் காண வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை நாங்கள் பரிசீலிப்போம்” என்று கூறியிருப்பது, கட்சியின் புதிய பாதையைத் தெளிவுபடுத்துகிறது. தனித்துப் போட்டி அல்லது புதிய கூட்டணிகாங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளை நம்பாமல் சொந்தப் பலத்தில் களம் இறங்குவது.39 தொகுதிகளிலும் ‘உதயசூரியன்’தமிழகத்தின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் மீண்டும் தன்வசப்படுத்தி டெல்லியில் தவிர்க்க முடியாத சக்தியாவது.

விஜய் அரசுக்கு செக்மத்திய அரசுத் திட்டங்கள் மற்றும் மாநில உரிமைகளை டெல்லியில் ஓங்கி ஒலிப்பதன் மூலம், தவெக அரசை விடத் தாங்களே மக்களுக்கான கட்சி என நிரூபிப்பது. நெருக்கடி காலங்களில் எல்லாம் வீறுகொண்டு எழுவதே திராவிட பாரம்பரியம் என்பதை நிரூபிக்க நினைக்கும் மு.க.ஸ்டாலின், இந்த முறை டெல்லியைத் தன்வசப்படுத்த வகுத்துள்ள ‘தேசியக் கணக்கு’ எந்த அளவிற்குப் பலன் தரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago