Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

vijay stalin

சட்டமன்றத்தில் எங்ககே உங்க அப்பாவை காணோம் என முதல்வர் விஜய் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின், ”அப்பாவை அங்கே தேடாதீர்கள்; மக்கள் மனதில் பதிந்திருக்கிறான். நீங்கள் தேடும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். மக்கள் தேடும் இடத்தில் நிச்சயமாக நான் முதல் ஆளாக நிற்பேன். கோட்டையிலேயே இருக்கிறேன். நான்தான் ஆட்சியில் இருக்கிறேன்” எனத் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள தவெக ஐடிவிங்க்., “நான்தான் முதல்வர்… நான்தான் முதல்வர்…” என்கிறார் தீயசக்தி திமுக என்ற கார்ப்பரேட் குடும்பக் கம்பெனித் தலைவர் கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.. கனவு காண்பதை தன் வீட்டில் கண்டால் பரவாயில்லை. அதை ஒரு கல்யாண வீட்டில் காண்கிறார். அதுவும் பட்டப்பகலில் கனவு காண்கிறார். கனவு காண்பது அவரவர் உரிமை. பவளவிழாப் பாப்பாவை பால்டப்பா போல உருட்டுகிறார் ஜூனியர். இப்போது சீனியரும் சேர்ந்து உருட்டுகிறார். தமிழ்நாட்டையே உருட்டு உருட்டு என உருட்டியவர்கள் இப்போது ஆட்சி அதிகாரம் கனவாகிப் போனக் கடுப்பில் கல்யாண வீட்டில் போய் ‘நான்தான் முதல்வர்’ பகல் கனவுப் பாட்டுப் பாடுகிறார்.

இதையும் படியுங்க  ''காரியவாதிடா நீங்க.. ஓட்டு போட்ட நாங்க என்ன லூசா..?'' இடைத்தேர்தலில் தவெகவுக்கு காத்திருக்கும் மரண அடி..!

பவளவிழாப் பாப்பா போகிறப் போக்கில் அவலவிழாப் பாப்பாவாக மாறி அழுமூஞ்சிப் பாப்பாவாக ஆகி இருக்கிறது. இறுதியில் அழுகுனிப் பாப்பாவாக மாறும் அவல நிலைக்குச் செல்லப் போவது உறுதி” என்று கூறியுள்ளது.

மற்றொரு பதிவில், ”திகார் ஜெயிலில் திமுகவின் திருட்டுக் கொள்கையை வளர்த்த அலைக்கற்றை கூஜா எல்லாம் நம் வெற்றித் தலைவரை நாராசமாகப் பேசி இருக்கிறார். பிதற்றி இருக்கிறார். உளறி இருக்கிறார். வாந்தி எடுத்திருக்கிறார். வகைதொகை இல்லாமல் அவதூறு கழகத்தின் அந்திமக் காலத்தை இந்த நாராசக் கூஜா போன்றவர்கள்தான் தொடங்கி வைத்து இருக்கின்றனர்” என கடும் பதிலடி கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago