Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

நடிகை ராதிகா சரத்குமார் தனது தாய் மற்றும் தனது திரைத்துறை குருநாதரான இயக்குநர் பாரதிராஜா ஆகிய இருவரையும் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து இழந்த வேதனையை மிகுந்த சோகத்துடன் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், “என்னை உருவாக்கிய இரண்டு பேர்கள் என் தாய் மற்றும் என் குருநாதர் பாரதிராஜா. இந்த ஒரே ஆண்டில் என் வாழ்வின் அஸ்திவாரமாக இருந்த அந்த இரண்டு தூண்களையும் நான் இழந்துவிட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. மனம் மிகவும் கனத்திருக்கிறது” எனவும் அவர் கூறியுள்ளார். தன் வலியை உணர்ந்து, தன்னுடன் நின்று ஆதரவு அளித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர்களின் நினைவுகளும், அவர்கள் கற்றுத்தந்த வாழ்க்கைப் பாடங்களும் தன்னுடன் என்றும் பயணிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராதிகா சரத்குமாரின் தந்தை மறைவுக்குப் பிறகும், அவரது தாயார் அவருக்கு உறுதுணையாக இருந்து, சினிமா துறையில் நடிக்க ஊக்கமளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க  "அவரா இப்படி..? ஆடிப்போய்ட்டேன்..!'' விஜய் குறித்து மனம் திறந்த ரோஜா..!

அதேபோல், இயக்குநர் பாரதிராஜா 1978 ஆம் ஆண்டு “கிழக்கே போகும் ரயில்” திரைப்படத்தின் மூலம் ராதிகாவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து, அவரது திரை அடையாளத்தை உருவாக்கியவர் ஆவார்.

ஒரே ஆண்டில் தன்னுடைய வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்த தாயையும், திரை உலகில் முகவரி தந்த குருவையும் இழந்த துயரத்தில் ராதிகா சரத்குமார் மிகுந்த மனவேதனையில் உள்ளார். அவருக்கு திரையுலகினர் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அவர் தனது பதிவில், தனது குருநாதர் பாரதிராஜாவுக்கு உருக்கமான இரங்கலைத் தெரிவித்ததுடன், அவருடன் இருந்த இறுதி நாட்களின் நினைவுகளையும், தேசிய விருது கிடைக்கும் என அவர் வாழ்த்திய தருணத்தையும் பகிர்ந்துள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago