https://republictn.com/

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள புதிய சுயாதீன (Independent Album) ஆல்பமான “அரவிந்த்” தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த ஆல்பம், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

இந்த ஆல்பத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியானதும் இணையத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது “அரவிந்த்” ஆல்பத்தின் முழுப் பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

திரைப்படப் பாடல்களை மட்டுமின்றி, அனிருத் அவ்வப்போது வெளியிடும் சுயாதீன இசைத் தொகுப்புகளும் (Independent Music) பெரும் வெற்றி பெறுவது வழக்கம். அந்த வரிசையில், இந்த “அரவிந்த்” ஆல்பமும் அவரது அடுத்த மாஸ் இசை முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இந்த சுயாதீன தனிப்பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து, பிரபல பாடலாசிரியர் சூப்பர் சுபுவுடன் (Super Subu) இணைந்து பாடியுள்ளார். அனிருத்தின் பல வெற்றிப் பாடல்களுக்கு வரிகள் எழுதிய சூப்பர் சுபு தான் இந்த ஆல்பத்திற்கும் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இந்த ஆல்பத்தை அனிருத்தின் சொந்த இசை நிறுவனமான “Albuquerque Records” தயாரித்து வெளியிட்டுள்ளது. மேலும், இதன் விநியோக உரிமத்தை Universal Music India பெற்றுள்ளது.

மொத்தம் 4 நிமிடங்கள் 9 விநாடிகள் ஓடும் இந்த மாஸ் மற்றும் எனர்ஜி நிறைந்த பாடல் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

“ஒவ்வொரு சுயாதீன கலைஞருக்கும் ஒரு கதை இருக்கிறது; ஒவ்வொரு நிராகரிப்பும் வெளிச்சத்திற்கு வர தகுதியானது” என்ற வலுவான செய்தியுடன் இந்த ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மிக்ஸிங் பணிகளை ஸ்ரீனிவாசன் M மற்றும் வினய் ஸ்ரீதர் மேற்கொண்டுள்ளனர். மாஸ்டரிங் பணிகள் Mix Magic Studioவில் ரூபேந்தர் வெங்கடேஷ் செய்துள்ளார். இசை ஒருங்கிணைப்பை வேலவன் B மேற்கொண்டுள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago