Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகியுள்ள கே. அண்ணாமலை, கடந்த ஜூன் 5, 2026 அன்று “We The Leaders” (நாங்கள் தலைவர்கள்) என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இயக்கமாக செயல்படும் இந்த அமைப்பு, விரைவில் முழுமையான அரசியல் கட்சியாக மாற்றப்பட்டு, தமிழ்நாட்டின் அடுத்த பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்தவொரு அமைப்பும், இயக்கமும் பயன்படுத்தக் கூடாது என்று அவர் அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் அவரது பெயர் மற்றும் புகைப்படத்தை முன்னிறுத்தி புதிய அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அந்த அமைப்புகளுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அண்ணாமலை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தனது பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்துவதை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்க  மனிதர்களுக்கும் பரவும் ஆபத்து… கிளாண்டர்ஸ் குறித்து தமிழகம் முழுவதும் அலர்ட்!

மேலும், தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்து விரைவில் அதிகாரப்பூர்வ பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago