Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

”நம் தயவில் தான் இப்போதுள்ள ஆட்சி நடைபெறுகிறது. நம்முடைய தயவோடு நடைபெறக் கூடிய இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாம் பணியாற்ற வேண்டும்” என மு.க.ஸ்டாலின் பேசினார்.

மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், “பொதுவாக மாற்றுக் கட்சியினர் ஆளுங்கட்சியில் இணைவதும் வழக்கம்; நீங்கள் திமுகவை நோக்கி வந்துள்ளீர்கள். ஆட்சி பறிபோகும் என்று தெரிந்தும்கூட எமர்ஜென்சியை எதிர்த்த இயக்கம் திமுக. எதிர்க்கட்சியான திமுகவை நோக்கி நீங்கள் வந்துள்ளீர்கள் என்றால் பதவி சுகத்துக்காக வரவில்லை.

வெற்றிக்காக வெறிகொண்டு எப்போதும் திமுகவினர் அலைந்தது இல்லை. கூட்டணி கட்சித் தலைவர்கள் என்னிடம் கேட்டபோது, ‘நீங்கள் செல்லுங்கள், உங்கள் விருப்பம், உங்கள் ஜனநாயக உரிமை, நான் தடுக்க மாட்டேன்; ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது, அதன் மூலம் பாஜக ஆட்சி தமிழ்நாட்டிற்கு வந்துவிடக்கூடாது’ என வழியனுப்பி வைத்தேன். நம் தயவில் தான் இப்போதுள்ள ஆட்சி நடைபெறுகிறது. நம்முடைய தயவோடு நடைபெறக் கூடிய இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாம் பணியாற்ற வேண்டும்” எனப் பேசினார்.

இதையும் படியுங்க  யாருகிட்ட 'பருப்பை' காட்டுறார்..? நொடியில் தூக்கியடித்த CM விஜய்.! மிரண்டு தவிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago