https://republictn.com/

பீகார் மாநிலத்தில் 33 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, 84 வயது முதியவரை நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மீதமுள்ள ஒருவருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது. நடக்க கூட முடியாத நிலையில் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த முதியவரின் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் ராகவ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அதாலத் ராய் (84). கடந்த 1992 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி, கிராமத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை முயற்சி மற்றும் கலவர வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுமார் 33 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதியவரை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நடக்க கூட முடியாத நிலையில் இருந்த அந்த முதியவரை, இருவர் தாங்கிப் பிடித்தபடி சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago