எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியல் அல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையது அல்ல. பேரவையில் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள ராஜினாமா செய்த எம்எல்ஏக்களை உடனடியாக கட்சியில் சேர்ப்பது, கட்சி தாவலை ஊக்குவிப்பதாக அமையும், என தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் தவெகவில் இணைந்ததாக தெரியவில்லை. இது ஆரோக்கியமான அரசியல் நடைமுறைக்கு பொருந்தாத ஒன்று, என்றும் பி. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, இத்தகைய செயல்கள் அரசியல் நெறிமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, கட்சி தாவலை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும், என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
