அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் நிலவி வரும் நிலையில், மூன்று அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரகதம் குமரவேல், சத்தியபாமா மற்றும் ஜெயகுமார் ஆகிய மூன்று எம்எல்ஏக்கள் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கியுள்ளனர்.
ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்புகளாக அதிமுக எம்எல்ஏக்கள் பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதனால் அதிமுகவில் நிலவும் உட்கட்சி குழப்பம் மேலும் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாகவே பல எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில், இந்த ராஜினாமா முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சில எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், சிலர் எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்தனர். இந்நிலையில் தற்போது மூன்று எம்எல்ஏக்கள் எந்த அணிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் தங்களது பதவியை விட்டு விலகியுள்ளனர்.
இந்த நிலை அதிமுகவின் சட்டமன்ற பலத்தை குறைக்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்தடுத்து சில எம்எல்ஏக்களும் இதேபோன்ற முடிவை எடுக்கலாம் என்ற தகவலும் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அதிமுகவில் தொடரும் உட்கட்சி குழப்பம் கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது.
