Modi - Vijay

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்று சில மாதங்களே கடந்திருக்கும் நிலையில் அக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகளால் அரசியல் களத்தில் பெரும் புயல் வெடித்திருக்கிறது.

ஆட்சியில் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையிலும் நிர்வாக சீர்குளைவை வெளிப்படுத்தும் வகையிலும் எழுந்திருக்கும் இந்த விவகாரங்களால் கட்சி தலைமை கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதன் எதிரொளியாக சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கும் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அதிரடியாக அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த கூட்டத்தில் அனைவரும் எவ்வித விளக்கமும் இன்றி கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது. சமீப நாட்களாக அரசு இயந்திரத்தை கேலி கூத்தாக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படும் மூன்று எம்எல்ஏக்கள் மற்றும் இரண்டு அமைச்சர்கள் மீது விரிவான விசாரணை நடத்த முதல்வர் விஜய் முடிவெடுத்திருக்கிறார். இதில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பெண் மாவட்ட ஆட்சியரிடம் தவறாக நடந்து கொண்டது, சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் வாக்காளரை தாக்கியது போன்ற நிகழ்வுகள் முதன்மையான பிரச்சனைகளாக வெடித்துள்ளன.

இதையும் படியுங்க  "சென்னையில் பரபரப்பு! ஒரே பிரேமில் கனிமொழி - திருமாவளவன்.. மருத்துவமனையில் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?"

குற்றச்சாட்டுகள் உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் வகித்து வரும் அரசு பதவிகளை பறிக்கவும் கட்சி ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தலைமை தயங்காது என்ற செய்தி கசிய தொடங்கியுள்ளது. இந்த ஒழுங்கு நடவடிக்கைகளுடன் சேர்த்து ஊடகங்களில் கண்டபடி பேட்டி கொடுக்கும் அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டு போடவும் இக்கூட்டத்தில் திட்டவட்டமான முடிவெடுக்கப்பட உள்ளது. ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக அரசு நிர்வாகத்தில் நாம் எத்தனை சிறப்பான நடவடிக்கைகளை எடுத்தாலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் கட்டுப்பாடற்ற பேச்சுகளாலும் அராஜக செயல்களாலும் எல்லாமே வீணாகி போகிறது என்று முதல்வர் விஜய் உட்கட்சி வட்டாரத்தில் கடுமையான மனக்குமுறலை வெளிப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

இவர்களால் தான் கட்சிக்கு இத்தனை கெட்ட பெயரா? என்று புலம்பும் அளவிற்கு தலைமை கடும் விரக்தியில் உள்ளது. தவெக அரசு மீது மக்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த அதிருப்தியையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி கூட்டணி கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் கூட்டணியை முறித்து கொண்டு கழன்று கொள்ளலாம் என்ற கடுமையான அச்சமும் தவெக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "எல்லாம் CM விஜய் அண்ணன் பாத்துப்பார்!" திரையரங்குப் படத் திருட்டு விவகாரத்தில் கார்த்தி கொடுத்த அதிரடி ஓபன் டாக்!

வரவிருக்கும் இடைத்தேர்தல்கள், அரசியல் சவால்களை சமாளிக்கவும் கூட்டணி பிளவை தவிர்க்கவுமே நாளை அவசர கூட்டம் அவசியமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக மேலும் வளமடையவும், மத்திய அரசின் முட்டுக்கட்டைகளை தவிர்க்கவும் மத்திய டெல்லி தலைமையுடன் உறவை மேலும் மேம்படுத்திக் கொள்ளவும் நாளைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள்மன்றத்தில் தவெகவின் நேர்மைக்கு களங்கம் விளைவிக்கும் நபர்களின் பதவிகளை பறிக்கவும் கட்சி கட்டுப்பாட்டை மீறுபவர்களை தயவு தாட்சனியம் இன்றி நீக்கவும் முதல்வர் விஜய் தயாராகிவிட்டார். அதிகார திமிரில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்ற கடுமையான எச்சரிக்கையை முதல்வர் விஜய் விடுக்கவுள்ளார். நாளை அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள இந்த அதிரடி முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய திருப்பத்தையும் தவெக உட்கட்சியில் அதிரடியான மாற்றங்களையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *