Vijay

தீபாவளிக்கு போலீஸ் வட்டாரத்தையும், ஒவ்வொரு ஸ்டேஷனையும் கிஃப்ட்டுகளும் கரன்சிகளும் முற்றுகையிடும். ஆனால் இந்த தீபாவளிக்கு கிஃப்டே இல்லாத கரன்சி கப்பவர்கள் இல்லாத தீபாவளியாக மாற்றி இருக்கிறது சென்னை போலீஸ்.

தீபாவளி நெருங்கினாலே சென்னை மாநகர காவல் துறையில் இருக்கிற பல பிரிவுகள் மற்றும் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் கிப்ட் பாக்ஸ்களும், கரன்சி நோட்டுகளும் சர்வசாதாரணமாக உலா வரும். தொழிலதிபர்கள், கட்டுமான நிறுவனங்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், பார் உரிமையாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என சென்னையில் இருக்கிற பெரிய நிறுவனங்கள் போலீஸ் தயவு, எப்பவும் தேவை என்பதால் சென்னை மாநகர போலீஸில் இருக்கிற பிரிவுகளுக்கும், பெரும்பாலான ஸ்டேஷனுக்கும் கிஃப்ட்டுகளையும் கரன்சி கவர்களையும் அனுப்பி வைப்பார்கள்.

தீபாவளி நெருங்கினாலே காக்கி வட்டாரம் சந்தோஷ பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சிரும். ஆனால் இந்த தீபாவளிக்கு மேலே சொன்ன எந்த சுவடுமே சென்னை மாநகர காவல் எல்லையிலே இல்லை. எந்த பரிசு பொருளும் போலீஸ்கைக்கு வரவே கூடாது என சென்னை மாநகர காவல் துறை உத்தரவு போட்டு அதை கண்காணிக்க குழுவும் போட்டுவிட்டார்கள். உதாரணத்துக்கு அண்ணா நகர் ஏரியாவுக்கு நுங்கம்பாக்கம் போலீசையும், நுங்கம்பாக்கம் போலீஸ் லிமிட்க்கு கிண்டி ஏரியா போலீசையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.

இதையும் படியுங்க  வி.எஸ்.பாபுவுக்கு என்னதான் ஆச்சு..? எத்தனை நாளைக்குதான் மூடி மறைப்பீங்க..? 30 நாளாக வராத அப்டேட்..! 

அடுத்து வழக்கமாக கிஃப்ட் கொடுக்கிற நிறுவனங்கள், தனி மனிதர்களை ஓசையே இல்லாமல் தொடர்பு கொண்டு ”இந்த வருஷம் எந்த கிப்டயும் ஸ்டேஷன் பக்கம் வரக்கூடாது என முன்கூட்டியே போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *