இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று காலை ரூபாயின் மதிப்பு மேலும் உயர்ந்தது. கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 22 காசுகள் உயர்ந்து 93.77 பூஜ்ஜியமாக வர்த்தகமானது. இதற்கு முந்தைய வர்த்தக நாளில் ரூபாயின் மதிப்பு 93.98 ஆக இருந்தது. கடந்த வாரம் மட்டும் இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 4 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்தனர். இதனால் இந்திய ரூபாய்க்கான தேவை அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை வாங்கும் போது முதலீட்டுக்கான தொகையை ரூபாயாக மாற்ற வேண்டி இருக்கும். இதனால் சந்தையில் ரூபாய்க்கான தேவை அதிகரித்து அதன் மதிப்பு உயர உதவுகிறது. இந்த உயர்வுக்கு சர்வதேச மற்றும் உள்நாட்டு பொருளாதார காரணிகள் பல முக்கிய உந்து சக்தியாக திகழ்கின்றன. இந்த நாணய மதிப்பு மாற்றத்திற்கு பின்னால் மற்றுமொரு காரணம் உலகலாவிய கச்சாயை விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியாகும்.
இந்தியா தனது கச்சாயை தேவையின் பெரும் பகுதியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதால் இதற்கான கட்டணத்தை அமெரிக்க டாலரிலேயே செலுத்த வேண்டியுள்ளது. கச்சாய் எண்ணெய் விலை சரிந்திருப்பதால் இந்தியாவின் இறக்குமதி செலவு குறைந்து டாலருக்கான தேவையும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் கணிசமாக அதிகரித்திருப்பதும் மற்றொரு முக்கிய காரணமாகும்.
வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் போது உள்நாட்டு சந்தையில் டாலரின் வரத்து அதிகரித்து அது இந்திய ரூபாயின் மதிப்பை இயல்பாகவே உயர்த்துகிறது. மேலும் உலகளவில் நிலவி வந்த சில அரசியல் பதற்றங்கள் தனியும் என்று சாதகமான எதிர்பார்ப்பும் இந்த நாணய மேறெயலுக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளில் ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
இந்தியாவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்தது. அமெரிக்க மிட்டம் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வெற்றி தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு துறையில் அதிக முதலீடுகளை பெற்ற தென்கொரியா, தைவான் ஆகிய பங்குச் சந்தைகள் சரிய ஆரம்பித்துள்ளன. அதாவது அங்கு முதலீடு செய்த பணத்தை எடுத்து முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் சூழல் உருவாகியது. இருப்பினும் இந்த நாணய மதிப்பு உயர்வுக்கு பொருளாதார ரீதியாக மற்றுமொரு எதிர்மறையான பக்கமும் இருப்பதை மறுப்பதற்கு இல்லை.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு அவர்கள் ஈட்டும் ஒரு டாலருக்கு கிடைக்கும் இந்திய ரூபாயின் வருவாய் அளவு குறையும். இது தகவல் தொழில்நுட்ப மற்றும் ஜவலி போன்ற முன்னணி ஏற்றுமதி துறைகளின் லாப வரம்பை பாதிக்க கூடும். அதுமட்டுமல்லாமல், அதேபோல் பிரதமர் மோதியின் தலைமையில் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் அதிகரிப்பது, ஏற்றுமதி வணிகம் பெருகுவது மற்றும் இறக்குமதி சார்பை குறைத்தும் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பல நாடுகளுடன் ரூபாயில் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது இந்தியா. இதே நிலை நீடித்தால் இந்தியாவின் ரூபாய் மதிப்பு ஏறுமுகத்தில் இருக்கும்.
