Republic Tamil

‘‘முதல்வர் விஜய் தலைமையில், போன வாரம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டம் முடி ந்ததும் அதிகாரிகளை எல்லாம் அனுப்பிட்டு, அமைச்சர்களிடம் முதல்வர் மனம் விட்டு பேசி இருக்கிறார்.

அப்போது ‘உங்களில் சிலர் மீது புகார்கள் வருகிறது. தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். அதனால, கவனமா இருந்துக்கோங்க’ என பொதுவாக சொல்லியிருக்கிறார்.

‘‘மூத்த அமைச்சர் ஒருத்தர் மட்டும் எழுந்து, ‘தலைவரே இந்த பதவி நீங்க போட்ட பிச்சை. நீங்க இல்லாட்டி நாங்க இங்க வந்திருக்கவே முடியாது. நாங்க ஏதாவது தவறு பண்ணிட்டா, தனியா கூப்பிட்டு கண்டியுங்க. ஏன் ரெண்டு அடி கூட அடிங்க… வாங்கிக்கிறோம்… ஆனா, அதிகாரிகள் பேச்சை நம்பி மட்டும் எங்களை சந்தேகப்படாதீங்க’’ என பணிவாக சொல்லி இருக்கிறார். உடனே, மற்ற அமைச்சர்களும் மேஜையை தட்டி வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள்.

கோட்டை வட்டாரத்தில் சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமைச்சர்களின் பேச்சைக் கேட்காமல், நேரடியாக முதல்வரின் தனிப்பிரிவுக்கே ஃபைல்களை அனுப்புவதாகவும், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த உளவுத் தகவல்களை அதிகாரிகளே முதல்வருக்கு பாஸ் செய்வதாகவும் அமைச்சர்கள் மத்தியில் பலத்த அதிருப்தி நிலவுகிறது.

இதையும் படியுங்க  ஆந்திர பாணியில் ஆதவ் அர்ஜுனா ஆட்சியை கவிழ்த்துவிடுவார் என்ற பயமா? இறங்கி விளையாடும் அப்பாவு!

அதனால்தான், “அதிகாரிகள் பேச்சை நம்பி எங்களைச் சந்தேகப்படாதீர்கள். எங்களை தனியாகக் கூப்பிட்டுத் தண்டியுங்கள்” என அந்த சீனியர் அமைச்சர் ஓப்பனாகவே கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு ஒட்டுமொத்த அமைச்சரவையும் மேஜையைத் தட்டி ஆதரவு தந்ததும் இந்த ‘அதிகாரிகள் மீதான கடுப்பு’ காரணத்தால்தான்

அமைச்சர்கள் சிலர் மீது மாவட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் கிளம்பியுள்ளதாக உளவுத்துறை முதல்வருக்கு ரகசிய ரிப்போர்ட் அனுப்பியதே இந்த ஒட்டுமொத்த டென்ஷனுக்கும் அஸ்திவாரம். குறிப்பாக, அண்மையில் தவெக முக்கியப் புள்ளிகள், எம்.எல்.ஏ-க்கள் சிலரின் செயல்பாடுகள் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திய சூழலில், “அமைச்சர்களும் தறிகெட்டுப் போனால் ஆட்சிக்கு ஆபத்து” என்பதை உணர்ந்தே விஜய் இந்த டோஸை கொடுத்துள்ளார் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *