Maragatham - P. Sathyabama

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் இருவர் மற்றும் இந்நாள் எம்எல்ஏக்கள் இருவர் என மொத்தம் நான்கு பேருக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மே 13ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது கொறடா உத்தரவை மீறி, அதிமுகவை சேர்ந்த, 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகரிடம் புகார் மனு அளித்தார்.

அதில் 21 எம்எல்ஏக்கள் மீதான புகார் திரும்ப பெறப்பட்டது. மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா, பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் மீதான புகார் திரும்ப பெறப்படவில்லை. அவர்கள் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர்.

அதேபோல, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர். இந்த ஆறு பேர் மீதான தகுதி நீக்க வழக்கு நிலுவையில் உள்ளது.

இதையும் படியுங்க  விஜய் அமைச்சரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்..! அந்த 2 பேர்..! வெளியானது பட்டியல்..!

அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நான்கு பேர் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது சரியானதே என, தெரிவித்தது. தகுதி நீக்கம் தொடர்பான மனுக்கள் மீது 2 மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் சபாநாயகருக்கு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார். வரும் 10, 11, 12ம் தேதிகளில், மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேரிடமும் நேரில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக நான்கு பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அப்போது, இபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி வாதாட உள்ளார். தொடர்ந்து வரும், 17ம் தேதி இறுதி விசாரணை நடத்தி, அதன்பின், சபாநாயகர் தனது முடிவை அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் ஏற்கனவே தவெக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் எம்எல்ஏவாக தேர்வாகி உள்ளனர். அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  "ராஜினாமா லெட்டரோட ரெடியா இரு!" - ஆதவ் அர்ஜுனாவின் சவாலுக்கு திமுக பரந்தாமன் கொடுத்த அனல் பறக்கும் பதிலடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *