தெருவோர வியாபாரி, டாக்ஸி டிரைவர். பின்னாளில் தன்னைப் மத போதகர் என்று அறிவித்துக்கொண்ட பால் மெக்கன்சி  , 2003-ல் மலிண்டி நகரில் Good News International Church என்ற சர்ச்சைத் தொடங்குகிறார் 

பிறகு டிவி மூலம் பிரசங்கம், கிளை சர்ச்சுகள் என ஆயிரக்கணக்கான பின்தொடர்பாளர்களைச் சேர்த்தார். அவரது போதனை ஒன்றுதான்:

“உலகம் அழியப் போகிறது. இயேசுவைச் சந்திக்க வேண்டும் என்றால், பட்டினி கிடந்து சாக வேண்டும்.”

2. ஷகஹோலா காட்டில் நடந்தது என்ன? மலிண்டியில் இருந்த சர்ச்சை மூடிவிட்டு, நூற்றுக்கணக்கான பின்தொடர்பாளர்களை அழைத்துக்கொண்டு ஷகஹோலா காட்டுக்குள் குடியேறினார் மெக்கன்சி.

அங்கே குழந்தைகள் முதலில் பட்டினி கிடக்க வேண்டும், பிறகு பெண்கள், கடைசியில் ஆண்கள் என்று வரிசை போட்டிருக்கிறான் பட்டினியால் சாக மறுத்தவர்கள் தப்பிக்க முயன்றவர்களை  காவலர்களை வைத்து அடித்துக் கொல்லப்பட்டனர் 

2023 ஏப்ரலில் போலீஸ் அங்கே நுழைந்தபோது, காடு முழுக்க ஆழமில்லாத குழிகளில் புதைக்கப்பட்ட உடல்கள். அதுதான் ‘ஷகஹோலா காட்டுப் படுகொலை’ என்று உலகம் அறிந்த சம்பவம்.

இதையும் படியுங்க  தாகத்தில் தவிக்கும் ஜோலார்பேட்டை , 1.82 லட்சம் லிட்டர் குடிநீர் வீண் ? - ஈகோ யுத்தம் நடத்தும் 3 அதிகாரிகள்!

3. 191 பேரா? 400 பேருக்கு மேலா? –  இந்த வழக்கில் நிரூபிக்கப்பட்ட கொலைகள்: 191

அதில் 190 குழந்தைகள் + 1 பெரியவர் ஆனால் காட்டில் இருந்து மீட்கப்பட்ட மொத்த உடல்கள்: 400-க்கும் மேல்

கென்ய மனித உரிமை ஆணையத்தின் கணக்குப்படி பலி எண்ணிக்கை 429

ஏன் இந்த வித்தியாசம்? பல உடல்கள் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், அதில் 26 உடல்களை மட்டுமே அடையாளம் காண முடிந்தது என்கிறது போலீஸ். அதனால், ஆதாரத்தோடு நிரூபிக்க முடிந்த 191 கொலைகளுக்கு மட்டுமே இப்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

4. 200 ஆண்டு சிறை?

நவம்பர் 6, 2026, வெள்ளிக்கிழமை. மொம்பாசா உயர் நீதிமன்றம். நீதிபதி டயானா கவேட்சா தீர்ப்பு வழங்கினார்.

அதில் பட்டினியால் கொன்றதற்கு: 100 ஆண்டுகள்

நேரடியாக அடித்துக் கொன்றதற்கு: 100 ஆண்டுகள்

இரண்டும் சேர்த்து தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் = மொத்தம் 200 ஆண்டுகள் சிறை என்றார் 

அதாவது, கென்யாவில் மரண தண்டனை இருந்தாலும், நீதிமன்றம் அவர் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய இப்படி ஒரு தண்டனையைக் கொடுத்துள்ளது.

இதையும் படியுங்க  பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் தவெக எம்எல்ஏவை கைது செய்யக்கோரி பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அவனுடன்  குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 28 பேருக்கும் 10 முதல் 160 ஆண்டுகள் வரை சிறை விதிக்கப்பட்டது. அவனது  உதவியாளர் ஸ்மார்ட் ம்வகலமாவுக்கு 160 ஆண்டுகள் சிறை.

அக்டோபர் 19-ம் தேதிதான் 191 கொலைக் குற்றங்களில் அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்தது. அதற்கு இரண்டு வாரங்கள் கழித்து தண்டனை அறிவிக்கப்பட்டது.

5. கதை இன்னும் முடியவில்லை!

இது ஒரு வழக்கு மட்டுமே. மெக்கன்சி மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் உட்பட வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அதில் 94 பேர் சேர்த்து குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

தண்டனை பெற்றவர்களுக்கு மேல்முறையீடு செய்ய 14 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

 200 ஆண்டு சிறை, 191 பேர் மரணம் என்பது 100% உண்மை. ஆனால் அது இந்த கொடூரத்தின் ஒரு பகுதிதான். உண்மையான பலி 400-ஐத் தாண்டும் என்பதே கென்யாவை இன்னும் கதற வைத்துக் கொண்டிருக்கிறது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *