Seeraga Samba

மதிய சாப்பாட்டுக்கு சீக்கிரமா, சிம்பிளா ஏதாவது செய்யணும்னு நினைக்கிறீங்களா? அதுவும் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுற மாதிரி இருக்கணுமா?

அப்ப வீட்டுல இருக்குற சோயாவை வச்சே இந்த வெள்ளை பிரியாணியை செஞ்சு பாருங்க. வழக்கமா செய்ற சோயா 65, சோயா கிரேவி மாதிரி இல்லாம, கொங்கு நாட்டு ஸ்டைல்ல, மசாலா அரைச்சு செய்ற இந்த பிரியாணி டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இதுக்கு தனியா சைடு டிஷ் கூட தேவையில்லை.

வாங்க, எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். – தேவையான பொருட்கள்

ஊற வைக்க: • மீல் மேக்கர் – 1 கப் • தயிர் – 1/2 கப் • உப்பு – தேவையான அளவு 

மசாலா அரைக்க: • சின்ன வெங்காயம் – 1 கப் • பச்சை மிளகாய் – 5 • இஞ்சி – 1 சிறிய துண்டு • பூண்டு – 5 பல் • சோம்பு – 1 டீஸ்பூன் • மிளகு – 1 டீஸ்பூன் • பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 1 • அன்னாசி பூ – 1 

இதையும் படியுங்க  நடிகை ராதிகா வீட்டுப் பணிப்பெண்ணின் மகன் - கடற்கரையில் புதைப்பு பின்னனி என்ன?‌

பிரியாணிக்கு: • சீரக சம்பா அரிசி – 1 கப் • தேங்காய் பால் – 2 கப் • பெரிய வெங்காயம் – 1 • பிரியாணி இலை – 1 • புதினா, கொத்தமல்லி – சிறிதளவு • எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் • எண்ணெய், உப்பு – தேவையான அளவு  

செய்முறை ;- 1. மசாலா அரைப்போம்:

முதல்ல மிக்ஸி ஜார்ல சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ எல்லாத்தையும் போட்டு நல்லா அரைச்சு எடுத்துக்கோங்க.

2. சோயாவை ஊற வைப்போம்: அரைச்ச மசாலாவை மீல் மேக்கரோட சேர்த்து, அதுகூட தயிர், உப்பு சேர்த்து நல்லா கலந்து கொஞ்ச நேரம் ஊற விடுங்க. இப்படி ஊற வைக்கிறதால தான் பிரியாணிக்கு அந்த தனி ருசி கிடைக்கும்.

3. தாளிப்போம்: குக்கரை அடுப்புல வச்சு எண்ணெய் ஊத்துங்க. எண்ணெய் காஞ்சதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளிச்சு, நறுக்கின பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்க.

இதையும் படியுங்க  காணாமல் போன ஆம்பூர் சிறுமி... 60-வது நிமிடத்தில் போலீசார் கிளைமாக்ஸ்!

வெங்காயம் நல்லா வதங்கினதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்குங்க.

4. பிரியாணி வைப்போம்: இப்போ ஊற வச்ச மீல் மேக்கர் கலவையை சேர்த்து நல்லா வதக்குங்க. பச்சை வாசனை போனதும் தேங்காய் பாலை ஊத்தி ஒரு கொதி விடுங்க.

அடுத்து கழுவி வச்ச சீரக சம்பா அரிசியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து மூடி வச்சு 2 விசில் விட்டு இறக்குங்க.

அவ்வளவு தான்! மணமணக்கும் சீரக சம்பா வெள்ளை பிரியாணி ரெடி. சூடா பரிமாறுங்க, வீட்டுல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.

| இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏| உங்களின் அன்பு வாசகர் A கோவிந்தம்மாள் கவுண்டப்பனூர் திருப்பத்தூர் மாவட்டம்

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

One thought on “Republic – தமிழ் | தீபாவளி ஸ்பெஷல் –  சீரக சம்பா வெள்ளை பிரியாணி..!”
  1. தீபாவளி ஸ்பெஷல் | வெள்ளை பிரியாணி சமையல் குறிப்புகள் அருமை அம்மா ..🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *