Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Gold

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கிராமக்கு ₹300 உயர்ந்துள்ளது. அதாவது நேற்று ₹12,800 இருந்தது.
இன்று தொடக்கத்தில் முதல் முறையாக ₹25 விலை உயர்ந்து ஒரு மணி நேரத்தில் மீண்டும் அது
₹275 ஒரு கிராமுக்கு உயர்ந்தது. 13,100. அதாவது ஒட்டுமொத்தமாக இன்று ஒரு நாளில் மட்டும் சவரனுக்கு ₹2400 உயர்ந்துள்ளது.

இந்த உயர்வு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்று சொல்லலாம். காரணம் ஏற்கனவே அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் மூன்றாம் தேதி இரவு எண்ணப்பட்டு நான்காம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்கள். அதாவது நமது நாடாளுமன்றத்தை போலவும் அதே போன்று நமது மேல்சபை போலவும் இந்த தேர்தல் உள்ளது.

இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய வெற்றி வாய்ப்பை பெருமளவில் இழந்துள்ளார். அவருடைய ஆண்டு காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் அவர் ஆட்சி செய்யும் நிலையில் அவர் இனிவரும் காலங்களில் எடுக்கக்கூடிய ஒவ்வொரு முடிவும் மேல்சபை மற்றும் கீழ் சபைகளில் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே சட்டமாக மாற்ற இயலும். தன்னிச்சியாக இதுநாள் வரை எடுத்து வந்த எல்லா முடிவுகளும் மாற்றம் ஏற்பட்டு இனி ஒரு போர் தொடுப்பதற்காகவோ அல்லது மற்ற நாடுகள் மீது ஏதாவது வரிவிதிப்பது என்பது எல்லாமே விரைவில் அவர் செய்ய
முடியாது.

இதையும் படியுங்க  100 கோடி பிணங்கள் விழும்..! பில் கேட்ஸ் விடுத்த கொடூர எச்சரிக்கை..! உலகையே உலுக்கும் பகீர் பின்னணி..!
Gold

எந்த ஒரு அறிவிப்பும் அவர் அனுமதி பெற்று செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும். அதனால்தான் சர்வதேச அளவில் இனி வரும் காலங்களில் கச்சா எண்ணெய் விலை சரியத் தொடங்கும். காரணம் பல நாடுகள் போரில் உள்ள காரணத்தால் கச்சா எண்ணெய் உயர்ந்து வந்தது. அமெரிக்கா இனி தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாத ஒரு சூழ்நிலையில் போர் நிறுத்தம் ஏற்படும் அல்லது போரில் சிறு தனிவுகள் ஏற்படும்.

அதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சரியும். கச்சா எண்ணெயில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள முதலீட்டார்கள் தங்கள் முதலீடுகளை மீண்டும் திரும்ப பெற்று தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்குவார்கள். அதனுடைய தொடக்கம்தான் இது. கநிசமான அளவு தங்கத்தின் விலை உயர்வதற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது. இனியும் தொடர்ந்து இது நீடிக்கும். இனி சிறிது சிறிதாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்லும். அதுமட்டுமல்லாமல் இந்த வருட இறுதி, அடுத்த வருடம் 2027ஆம் வருடம் மார்ச் மாதம் வரை தங்கம் ஒரு புதிய உச்சத்தை நோக்கி உயர்ந்து கொண்டே செல்லும்.

இதையும் படியுங்க  வேலையை விட்டு நீக்க புது ஃபார்முலா..! அந்த ஆர்டர் வருதா..? நிறுவனங்களின் ஜெகஜ்ஜால வித்தை..!

தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளி விலையும் அதை தொடர்ந்து பெரிய அளவு உயர்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறது. இரண்டும் நிச்சயமாக வரும் காலங்களில் ஒரு புதிய உயர்வை நோக்கி செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த ஆண்டு இறுதியில் இரண்டு லட்சத்தை தொடும் என்கிறார்கள்.

gold loan

இனி தொடர்ந்து கணிசமான அளவு தங்கம், வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டே செல்லும். இந்த உயர்வு தொடர்ந்து நடைபெறும். பல நாடுகள் தங்களுடைய கையிருப்பாக உள்ள அந்நிய நாட்டு செலவாணியையும் பெருமளவில் தங்கமாக மாற்ற தொடங்குவார்கள். அதுவும் தங்கம் விலை சர்வதேச அளவில் உயர காரணமாக இருக்கும். அதனால் வரும் மார்ச் மாதம் வரை ஏறக்குறைய ஒரு சவரன் இரண்டு லட்சம் ரூபாய் என்ற அளவில் வந்து நிற்கும்.

கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை பெருமளவில் சரிந்து வந்தது. அந்த நேரத்தில் வாங்கியிருந்தால் நிச்சயமாக இதுவே அவர்களுக்கு ஒரு ஊக்கத்தை கொடுத்திருக்கும். இருப்பினும் இப்பொழுதும் தாமதிக்காமல் இதன் மீது முதலீடு செய்வதோ அல்லது தங்கத்தை தங்களுக்கு தேவையான அளவு வாங்குவதோ ஒரு சிறப்பான ஒரு முதலீடாகவே நிச்சயமாக இருக்கும்.

இதையும் படியுங்க  ₹25,000 -ஆக குறையும் ஒரு சவரன் தங்கம்..? 2027ல் நடக்கப்போகும் அதிர்ச்சி..! வாங்குவது நல்லதா..? கெட்டதா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

44 minutes ago at 44 minutes ago