Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vijay’

திண்டுக்கல்லில் மத்திய மாநில அரசை கண்டித்து கழுத்தில் காய்கறி மாலை அணிந்து நூதன போராட்டம் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். “தமிழக அரசின் அறிவிப்புகள் வெற்று அறிவிப்பாக உள்ளது, சன்ன ரக அரிசி ரேஷன் கடைகளுக்கு வந்து சேரவில்லை” என போராட்டத்தின் போது சிபிஐ எம்பி சச்சிதானந்தம் குற்றச்சாட்டு
​
​தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை வாசியைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) சார்பில் திண்டுக்கல் நாகல் நகரில் இன்று 03.11.26 மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

​இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், தலைமை தாங்கினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

விலைவாசி உயர்வை மாநில அரசுக்கு உணர்த்தும் வகையில் காய்கறிகளை கொண்ட மாலை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய மாநில அரசு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதையும் படியுங்க  மாநிலங்களவை காலியிடங்களுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி தான் அந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், ​”தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நேரத்தில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சுமையைக் குறைக்க மத்திய அரசு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்; மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்.

​அதேபோல், ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ சன்ன ரக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து திட்டத்தைத் தொடங்கியது. ஆனால், களத்தில் ரேஷன் கடைகளில் விசாரித்தால் அத்தகைய அரிசி வந்து சேரவே இல்லை என்று கூறுகின்றனர்.

அதேபோல் ரேஷன் கடைகளில் வெங்காயம் விநியோகிக்கப்படும் என்ற அறிவிப்பும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. அரசாங்கம் நினைத்தால் வெளிமாநிலங்களில் இருந்தாவது வெங்காயம் மற்றும் சன்ன ரக அரிசியைக் கொள்முதல் செய்து மக்களுக்கு உடனடியாக விநியோகம் செய்ய முடியும்.

இதையும் படியுங்க  விஜய் அரசை உலுக்கும் ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: 'அந்த மேலிடம் யார்?' - உதயநிதியின் ஆக்ரோஷமான கேள்வி!

ஆனால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போல, இந்த அறிவிப்புகளையும் வெற்று அறிவிப்புகளாகவே மாற்றி மக்களை ஏமாற்றி வருகின்றனர். விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களின் சிரமங்களை உணராத அரசுகளாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன” என குற்றம்சாட்டினார்.

​திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழுத்தில் காய்கறி மாலைகள் அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago