Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Minister

லஞ்சம் கொடுப்பதும் குற்றம்… வாங்குவதும் குற்றம்… வாங்க முயல்வதை மறைப்பதும் குற்றம்! இது சட்டம் சொல்லும் பாடம். ஆனால், தமிழ்நாட்டில் சட்டத்தை காக்க வேண்டிய தவெக அமைச்சர்களே மேடையில் வாக்குமூலம் கொடுத்துவிட்டு, விசாரணை இல்லாமல் உலா வருகிறார்கள் என்றால்… இதை என்னவென்று சொல்வது?

ஒரு அமைச்சர் சொல்கிறார்… “லஞ்சம் கொடுத்ததற்கு நானே சாட்சி!” – இன்னொரு அமைச்சர் சொல்கிறார்… “என்னிடமே 5 கோடி லஞ்சம் தர வந்தார்கள்!”

இது உளறலா? இல்லை உண்மையின் ஒப்புதலா? தமிழ்நாடே இன்று கேட்கும் ஒற்றைக் கேள்வி… “விசாரணை எங்கே?”

முதல் அதிர்வு: “நானே முதல் சாட்சி!” நாள்: ஆகஸ்ட் 24, 2026. சட்டப்பேரவையில் 

பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன். “கடந்த ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்பட்டது. அதில் மிகப்பெரிய அளவில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். குற்றம் சாட்டினால் சாட்சி கேட்கிறார்கள்… நானே ஒரு சாட்சிதான். என் மீது அவதூறு வழக்கு போட்டாலும் பரவாயில்லை!”என்றார் 

இதை கேட்டு சபையே அதிர்ந்தது. காரணம், இது எதிர்க்கட்சி குற்றச்சாட்டு அல்ல… ஆளும் அமைச்சரின் சுய வாக்குமூலம்!

இதையும் படியுங்க  உச்சநீதிமன்றம் அதிரடி: சிபிஐ வளையத்தில் 397 கோடி ஊழல் வழக்கு - வசமாக சிக்கும் செந்தில் பாலாஜி..!

லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறார். தானே பாதிக்கப்பட்டதாகச் சொல்கிறார். தானே சாட்சி என்கிறார். சட்டப்படி இது **’Judicial Confession’**-க்கு சமம்!

உடனே வழக்கறிஞர் கே.சிவசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். “சட்டமன்றத்தில் லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு செய்ய வேண்டும்” என்பது கோரிக்கையும் வைத்தார் 

ஆனால், அந்த மனு ஏதோ ஒரு வகையில்’சரிகட்டல்’ மூலம் வாபஸ் பெறப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மனு தள்ளுபடியானால் குற்றம் இல்லாமல் போய்விடுமா?

1. “நானே சாட்சி” என்றவர், யாருக்கு எதிரான சாட்சி? பணம் வசூலித்த அதிகாரிகள் யார்? 2. எந்தப் பள்ளிக்காக, எவ்வளவு கொடுத்தார், யாரிடம் கொடுத்தார்? ஏன் இதுவரை விவரம் இல்லை? 3. கொடுத்தவரா, பாதிக்கப்பட்டவரா, சாட்சியா… அமைச்சரின் நிலை என்ன? வீர வசனம் பேசுவது அரசியல்… விவரம் தருவது சட்டத்தின் கடமை

இரண்டாவது அதிர்வு: “எனக்கே 5 கோடி பேரம்!” நவம்பர் 1, 2026. எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கம், தமிழ்நாடு நாள் விழாவில் 

இதையும் படியுங்க  விஜயின் மறுபக்கம்..! கதறும் அமைச்சர்கள்… குமுறும் கூட்டணித் தலைவர்கள்..!

பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏ.ராஜ்மோகன். “தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற ஒருவர் 5 கோடி லஞ்சம் தர முன்வந்தார். அவரை தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி அழைத்து வந்தார்! என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்”

இதை பார்த்து அரங்கமே உறைந்து போனது. காரணம், இது சினிமா வசனம் அல்ல… அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு பேசிய பகிரங்க குற்றச்சாட்டு!

இதனையடுத்து திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிடம் (DVAC) அதிகாரப்பூர்வ புகாரளித்துள்ளார்.

இந்த முறை புகார் கொடுத்தது எதிர்க்கட்சி… குற்றச்சாட்டின் மையத்தில் இருப்பது ஆளும் தரப்பு அமைச்சர்!

1. 5 கோடி பேரம் பேசிய “ஒருவர்” யார்? பெயரைச் சொல்லாமல் மழுப்புவது ஏன்? 2. அழைத்து வந்ததாகக் கூறப்படும் லயோலா மணியிடம் DVAC விசாரணை நடத்தியதா? 3. லஞ்ச முயற்சி நடந்தால் அமைச்சரின் முதல் கடமை மேடையில் பேசுவதா… இல்லை காவல்துறையில் புகார் கொடுப்பதா? 4. பதவிக்கு விலை பேசப்படுகிறது என்று தெரிந்தும் அதை மறைத்தது குற்றமில்லையா?  

இதையும் படியுங்க  ''திமுகவின் புது புரோக்கர் விஜய் சேதுபதி..? தைரியம் இருந்தா அரசியலுக்கு வா..!" கொதித்தெழும் தவெக!

சட்டம் தெளிவாகச் சொல்கிறது… லஞ்சம் கொடுப்பதும் குற்றம் (Prevention of Corruption Act Sec 8), லஞ்சம் கேட்பதும் குற்றம், முயல்வதும் குற்றம் என

அப்படியிருக்க, அமைச்சர்களே வாய்விட்ட பிறகும் DVAC தானாக  நீங்கள் முன்வந்து (Suo Motu) விசாரிக்காதது ஏன்?

“நானே சாட்சி” என்றவர் மீது வழக்கு இல்லை… “எனக்கே பேரம் வந்தது” என்றவர் மீதும் நடவடிக்கை இல்லை சட்டம் இருவருக்கும் ஒன்றுதானே?

ஆளும் கட்சி அமைச்சர் என்றால் சட்டம் வளைந்து கொடுக்குமா? இதுதான் வெற்றி  ஊழலுக்கு எதிரான யுத்தமா?

இன்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கும் கேள்வி ஒன்றுதான்… விசாரணை எங்கே? விசாரணை எங்கே?

லஞ்சப் பூதம் அமைச்சர்களைப் பார்த்து சிரிக்கிறது… அந்த சிரிப்பு சத்தம் DVAC காதுகளுக்கு கேட்கவில்லையா, இல்லை கேட்காதது போல் நடிக்கிறதா?.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago