Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, இன்னும் சில நாட்களில் ஆறு மாதங்கள் நிறைவடையவுள்ளன. இந்தச் குறுகிய கால ஆட்சிப் போக்கைச் சுட்டிக்காட்டி திமுக மற்றும் டெல்லியில் உள்ள பாஜக தலைமை உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு கடுமையான விமரிசனங்களை முன்வைத்து வருகின்றன.

சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு
விஜய் ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. டெல்லி ஆங்கில நாளிதழ் செய்தியின்படி, தமிழ்நாட்டில் கடந்த 30 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். 10 நாட்களாகக் காணாமல் போன ஒரு குழந்தையைக் கூட காவல்துறையால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஒரே 4 நாட்களில் 7 கொலைகள் அரங்கேறியுள்ளன. ஜாமீனில் வெளியே வருபவர்கள் காவல் நிலைய வாசலிலேயே வெட்டப்படுகிறார்கள். நீதிமன்ற வளாகங்களிலேயே பட்டப்பகலில் கொடூரக் கொலைகள் நடக்கின்றன. குற்றவாளிகள் கொலை செய்துவிட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் அளவிற்குப் பயமற்ற சூழல் நிலவுகிறது.

Murder

அதிர வைக்கும் சிறை உடைப்புச் சம்பவங்கள்
சிறைத்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளின் பாதுகாப்பு தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது . சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பியோடியுள்ளனர் . தேனி மாவட்டம் தெக்கம்பட்டி கிளைச்சிறையில் இருந்து ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடிய அசாதாரணச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இதனால் அமைச்சர் நிர்மல் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதையும் படியுங்க  திமுக, அதிமுக- ஆட்சியை காப்பியடிக்கும் தவெக..! நம்பிய மக்களுக்கு ஏமாற்றம்..! 50 நாள் விஜய் ஆட்சி மீது கடும் விமர்சனம்..!
Theni

வரலாறு காணாத விலைவாசி உயர்வு
சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு பெரிதும் பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ அரிசி 85 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் கூட இந்த அளவிற்கு விலைவாசி இல்லை.
இந்திய தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மிக அதிகமாக இருப்பதாகப் பொருளாதார அறிஞர் கலையரசன் கவலை தெரிவித்துள்ளார்.

மிரட்டல் அரசியல்- அடக்குமுறைகள்
அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீது காவல்துறை ஏவப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தவெக எம்.எல்.ஏ-வுக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் தவறான கருத்து பதிவிட்டதாகக் கூறி, அடையாறில் வசிக்கும் கலையரசன் என்பவரை நள்ளிரவில் 3 போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். ஆனால், தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை என்று அவர் பிறகு தெரிவித்துள்ளார்.

Power Cutt

முடங்கும் தொழில்துறை- மின்வெட்டு
மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் உற்பத்திச் செலவு 50 ரூபாயில் இருந்து 75 ரூபாயாக உயர்ந்ததால், திருப்பூரில் 50% கம்பெனிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

இதையும் படியுங்க  விஜயின் பிம்பத்தை வட மாநிலங்களில் சுக்கு நூறாக உடைக்கும் பாஜக..! அட, இப்படியொரு வியூகமா..?

தொலைநோக்குத் திட்டம் இல்லாததால், மின் பற்றாக்குறையைப் போக்க இந்தியாவிலேயே இல்லாத அதிகபட்ச விலையான 37 ரூபாய்க்கு ஒரு மெகாவாட் மின்சாரத்தை அரசு கொள்முதல் செய்கிறது. இதனால் மின்சாரத் துறையில் நாளொன்றுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

போதைப்பொருள் மாபியா பின்னணி
தவெக கட்சியின் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ‘மெத்’ பூபாலன் என்பவர் மத்திய அரசின் டி.ஆர்.ஐ அமைப்பால் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைப் போதைப்பொருள் உற்பத்தி மையமாக மாற்றிய இவர், இதன் மூலம் ஈட்டிய பணத்தைத் தவெகவின் தேர்தல் செலவுகளுக்குப் பயன்படுத்தியதாகக் கடுமையான புகார்கள் எழுந்துள்ளன. இந்தச் செய்தியை வெளியிடும் பத்திரிகையாளர்களுக்குத் தவெக ஒன்றிய செயலாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படுகிறது .

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்
ஊழலற்ற தூய்மையான அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசில், நிதி மற்றும் சட்டத்துறையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்குத் தகுதியை விட பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்படுவதாக உயர்நீதிமன்றம் வரை புகார்கள் சென்றுள்ளன.

இதையும் படியுங்க  "ரத்த வெள்ளத்தில் மூதாட்டி… தியேட்டரில் 'Blastu Blastu' கொண்டாட்டம்! தவெக அரசை அலறவிட்ட இபிஎஸ்!"
Vijay’

எதிர்க்கட்சிகளின் கேள்வி -முதல்வரின் மௌனம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், “சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போகும்போது முதலமைச்சர் விஜய் ஏன் இன்னும் கேரவனிலேயே அமர்ந்திருக்கிறார்? ஏன் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பதில்லை?” எனக் கேள்வி எழுப்புகின்றனர். ராஜ்மோகன், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி போன்ற 4 பேரை மட்டுமே வைத்துக் கொண்டு இன்னும் சினிமா ‘மஜா’விலேயே ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்காமல், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு விஜய் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த ஆட்சியில் 5 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் கடன் சுமை, இந்த ஒரே ஆண்டிலேயே மேலும் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கத் திட்டமிட்டதன் மூலம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. மக்கள் கொடுத்த நல்ல வாய்ப்பைச் சினிமா போல நடத்தாமல், சாமானியர்களின் நிஜமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசு தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே பொதுச் சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago