Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

gold loan

நகை வாங்கணும்னு பல மாதங்களா காத்திருந்தவர்களுக்கு ஒரு நற்செய்தி. தங்கம் விலை திடீரென குறைய தொடங்கி இருக்கிறது. அதுவும் சாதாரண சரிவு கிடையாது. ஒரே நாளில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 480 குறைந்திருக்கிறது. தங்கும் விலை ஏன் இவ்வளவு வேகமாக குறைகிறது? இனிமேலும் குறையுமா?

சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை பெரிய அளவில் சரிந்திருக்கிறது. இதற்கு பின்னால் இரண்டு முக்கியமான காரணங்கள் கூறப்படுகிறது. முதலாவது அமெரிக்காவின் பொருளாதார நிலைமை. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கலாம் என்ற அச்சம் மீண்டும் உருவாகி இருக்கிறது. குறிப்பாக எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கலாம் என்ற கவலை இருக்கிறது. இதனால் அமெரிக்க மத்திய வங்கியான டரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் உருவாகி இருக்கிறது.

Gold

குறிப்பாக வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போது வங்கி பத்திரங்கள், அமெரிக்க அரசு பத்திரங்கள் போன்ற முதலீடுகள் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானம் தரக்கூடும். ஆனால் தங்கத்தை வாங்கி வைத்திருந்தால் அதற்கு வட்டி கிடையாது. அதனால் சில முதலீட்டாளர்கள் தங்கத்திலிருந்து பணத்தை எடுத்து வட்டி வருமானம் தரக்கூடிய முதலீடுகளுக்கு திரும்புகிறார்கள். இதுவும் தங்கத்தின் விலை குறைவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  ஏஐ- மூலம் புகுந்த ஏழரை சனி..! உலகுக்கே சாவுமணி.. மனிதர்கள் பேசுவதையே முடக்கும் பேராபத்து..!

இரண்டாவது காரணம் அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவு. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக முதலீடு செய்தும் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமா என்ற சந்தேகம் முதலீட்டாளர்களிடையே உருவாகி இருக்கிறது. இதனால் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் சரிந்திருக்கின்றன. பங்கு சந்தையில் நஷ்டத்தை சந்திக்கும் சில முதலீட்டாளர்கள் தங்களுடைய கடன்களை அடைக்கவும் உடனடியாக பணத்தை திரட்டவும் தங்கத்தை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற கட்டாய விற்பனையும் தங்கத்தின் விலை சரிவுக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தற்போது நகை வாங்க காத்திருக்கும் பலருடைய கேள்வி இனிமேலும் தங்கம் விலை குறையுமா? ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்திற்கும் கீழே வருமா என்பதுதான் தற்போதைய சூழலில் தங்கம் விலகில் மேலும் ஏற்ற இரக்கங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்காவின் பணவீக்கம் எப்படி இருக்கிறது? பெெடரல் ரிசர்வ் வங்கி வர்த்தி விகிதம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கிறது? சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு எப்படி மாறுகிறது? என்னை விலை எந்த திசையில் செல்கிறது என பல விஷயங்கள் தங்கத்தின் விலையை தீர்மானிக்கும்.

இதையும் படியுங்க  சென்னையில் பயங்கரம்..! உயிரைக் கொல்லும் மர்மப் பூச்சி..! மக்களே உஷார்..!
Gold Price

அதே நேரத்தில் முதலீட்டுக்காக தங்கம் வாங்க நினைப்பவர்களும் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் விலை குறையும் நேரத்தில் வாங்கினால் லாபம் கிடைக்கும் என்று உறுதி கிடையாது. இப்போது தங்கும் விலை சரிந்தாலும் சில சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட காலத்தில் தங்கத்தின் விலை மீண்டும் உயரக்கூடும் என்ற கணிப்பை வெளியிட்டிருக்கின்றனர். ஆக தங்கம் விலை குறைந்திருப்பது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக தெரியலாம். ஆனால் இந்த சரிவு தொடருமா? மீண்டும் விலை உயருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 hours ago at 5 hours ago