Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் அன்பழகன், தலைமையில் உப்பளம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட்ட அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன்…

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி பரிந்துரையின் பேரில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சுயநலத்திற்காக தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆதரவளித்துள்ளது என்பது தவறான ஒன்றாகும்.

தவெக வெளிப்படையான ஆட்சி என்று கூறிவிட்டு ஆட்சி அமைந்த பின்பு குதிரை பேரம் செயலில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து அதிமுகவை பலவீனப்படுத்தும் செயலில் தமிழக முதலமைச்சர் விஜய் ஈடுபட்டுள்ளார், அவரின் செயல் அநாகரிகமானது என்று குறிப்பிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் யார் தலைவர், யார் செயலாளர் என்று முடிவெடுக்கும் உரிமை அந்த கட்சியின் பொதுச்செயலாளருக்கு உள்ளது. இது சட்டமன்ற நடத்தை விதி. ஆனால் தமிழகத்தின் சபாநாயகர் வேண்டுமென்று குழப்பம் ஏற்படுத்தி சட்டமன்ற விதிக்கு புறம்பாக கால தாமதப்படுத்தி சதி திட்டம் தீட்டி வருகிறார். இந்த விவகாரத்தில் தமிழக சபாநாயகர் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக ஆளுநர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு தமிழக ஆளுநர் சபாநாயகர் அழைத்து கண்டிக்க வேண்டும். விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை நடத்தும் அருகதையை இழந்துள்ளது. குதிரை பேரமும், புஷ்பா அரசியலும் நடந்து வருவதாக விமர்சித்தார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago