தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத வகையில் ஒரு மாபெரும் அரசியல் சூறாவளியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் விலைவாசி உயர்வு, இன்னொரு பக்கம் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது எழுந்திருக்கும் மெகா ஊழல் குற்றச்சாட்டுகளும் அதனை தொடர்ந்து அரங்கேறி வரும் அதிரடி கைது நடவடிக்கைகளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் அடித்தளத்தையே உழுக்க தொடங்கியுள்ளன.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் பள்ளி கல்வித்துறையில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பித்தல், கட்டண நிர்ணயம் மற்றும் உள்கட்டமைப்பு சான்றிதல்கள் வழங்குவதில் சுமார் 400 கோடிக்கு மேல் மாபெரும் லஞ்ச முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் அதிர்ச்சி தகவல் கோட்டை வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது. இத்துறையில் அமைச்சர் அன்பில் மகேஷின் நேரடி மேற்பார்வையில் நியமிக்கப்பட்ட ஷண்முக பிரியா பிடி அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் மூலமாகவே இந்த பிரம்மாண்ட வசூல் வேட்டை மிக ரகசியமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. பொதுவாக திமுக ஆட்சி காலத்தில் துறை ரீதியான டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களில் பெறப்படும் கமிஷன் தொகையில் ஒரு பகுதி முதல் குடும்பத்திற்கு செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்துள்ளது.
இந்த நிலையில் பிடி அரசகுமார் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட பின்னரே இந்த இமாலய விவகாரம் அறிவாலயத்தை அதிர வைத்துள்ளது. இதற்கிடையில் தமிழக வெற்றி கழக அரசு திமுக தான் நமக்கு எதிரி என்ற கட்டமைப்பை வலுபடுத்த அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை தூசி தட்டி உள்ளது. இதன் முதல் விக்கெட் தான் அன்பில் மகேஷ். மேலும் இந்த 420 கோடி ஊழல் வழக்கில் அன்பில் மகேஷின் மனைவி ஜனனியும் தற்போது தீவிர விசாரணையின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

தனது மனைவியை இந்த மோசடி வழக்கில் இருந்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அன்பில் மகேஷ் திரைமறைவில் பல சமரச முயற்சிகளை மேற்கொண்டபோதும் தவெக அரசு தரப்பிலிருந்து அவருக்கு கடுமையான எதிர்மறையான பதிலே கிடைத்திருக்கிறது. அதற்கு பதிலாக பார்ட்டிஃபண்ட் என்ற பெயரில் திறைக்கு பின்னால் முதல் குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய தொகை கைமாறியது என்பதை முழு வாக்கு மூலமாக அளித்தால் அவரது மனைவியை இந்த வழக்கிலிருந்து முற்றிலும் விடுவிக்க வழிவகை செய்யப்படும் என அரசு தரப்பில் ஒரு இக்கட்டான நிபந்தனை விதிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கிசுகிசிக்கின்றன.
அன்பில் மகேஷ் மட்டும் அரசுக்கு அப்ரூவராக மாற சம்மதித்தால் அந்த ஆபத்தான வாக்கு மூலம் நேரடியாக தன்மீதும் தனது ஒட்டுமொத்த முதல் குடும்பத்தின் மீதும் பாய்ந்து அரசியல் வாழ்வையே முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்பதை உதயநிதி ஸ்டாலின் மிக் தெளிவாக உணர்ந்து கொண்டிருக்கிறார். இதன் காரணமாகவே அன்பில் மீது தன் நெஞ்சில் இருந்த தீராத கோபத்தை அப்படியே ஓரம் தள்ளிவிட்டு சிறையில் வாடும் அன்பில் மகேஷை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் மிகவும் கருணையோடும் பரிவுடனும் பேசி வருகிறாராம்.

உயிருக்குயிரான நண்பன் எந்த சூழலிலும் தன்னை காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்பதற்காகவே உதயநிதி ஸ்டாலின் இந்த திடீர் இணக்கமான போக்கை கையாள தொடங்கி இருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இதன் மூலம் தற்போதைய அரசியல் சூழலில் ஒட்டுமொத்த முதல் குடும்பத்தின் எதிர்காலமே அன்பில் மகேஷின் பிடியில் தான் சிக்கி இருக்கிறது என்பதை அரசியல் விவாதங்கள் சுட்டி காட்டுகின்றன.
